பக்கம்:புது டயரி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எழுதுகோலின் அவதாரம்

“எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” என்று பாரதியார் பாடுகிறார். எழுதுகோல் தெய்வம் என்பது முக்காலும் உண்மை. பேனா பென்ஸில்களைச் சரஸ்வதி பூஜையில் வைத்து வழிபடுகிறார்களே, அதை நினைத்து நான் இப்படிச் சொல்லவில்லை. தெய்வம் எப்படி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவத்தை எடுத்துக் கொள்கிறதோ, அப்படி எழுதுகோலும் எத்தனையோ அவதாரங்களை எடுத்திருக்கிறது. அவதாரம் எப்படிப் புதிதாக இருக்கிறதோ அதுபோல எழுதுகோல் எடுக்கும் அவதாரமும் புதிது புதிதாக இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் ராமாவாதாரம் ஆன பிறகுதான் கிருஷ்ணாவதாரம் கிருஷ்ணாவதாரத்தின்போது ராமர் இருக்கிறதில்லை. எழுதுகோல் அப்படி இல்லை. பழையதும் புதியதும் கலந்து நடமாடி வருகின்றன.

அந்தக் காலத்திலெல்லாம் காகிதம் கிடையாது. பனையோலேயில் தான் எழுதிவந்தார்கள். எழுத்தாணியால் எழுதி வந்தார்கள். நாம் இப்போது பேணாவினால் எவ்வளவு வேகமாக எழுதுகிறோமோ, அவ்வளவு வேகமாக எழுத்தாணியால் எழுதி வந்தார்கள். வேகமாக எழுதினார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்தில் வேகமாக ஓலையில் எழுதுபவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு எழுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/95&oldid=1151458" இலிருந்து மீள்விக்கப்பட்டது