பக்கம்:புது டயரி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதுகோலின் அவதாரம்

91

 எழுத்தாணிக்கு ஊசி என்றும் ஒரு பெயர் உண்டு. இடைக்காடர் பாடிய நூல் எழுத்தாணியினால் எழுத முடியாமல் அதன் தொழிலை முறியச் செய்தமையால் அதற்கு ஊசி முறி என்று பெயர்.

“காக்கை யிருந்து கஃறென்ன” என்று அந்த நூலில் வரும். காக்கையின் ஒலியை எப்படி எழுதுவது? ஏதோ ஒருவகையில் கஃறென்ன என்று எழுதிவைத்திருக்கிறார்கள். ஆட்டை ஓட்டும்போது கோனான் நாக்கை ஒருவகையாக மடித்து ஓர் ஒலியை எழுப்புவான். அதை எப்படி எழுதுவது? ‘இச், இச்’ என்றுதான் எழுத வேண்டும். அவன் எழுப்பும் ஒலி தெரியாவிட்டால் அந்த எழுத்துக்களிலிருந்து அதைத் தெரிந்து கொள்ள முடியாது.

எழுத்தாணியில் குண்டெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என்றெல்லாம் பலவகை உண்டு. ஒலையைச் சீவுவதற்குக் கத்தி ஒரு பக்கத்திலும் எழுத்தாணி ஒரு பக்கத்திலும் இருக்க மடக்கிக் கொள்ளும்படி இருக்கும் ஒருவகை எழுத்தாணி உண்டு. நீளமாக ஒருபக்கம் கத்தியும்.மற்றொரு பக்கம் எழுத்தாணியுமாக மடக்காமலே அமைந்த எழுத்தாணியும் உண்டு.மரத்தினாலும் தந்தத்தினாலும் பிடிபண்ணி எழுத்தாணியைப் பதித்திருப்பார்கள்.

எழுத்தாணி போன பிறகு இறகு பேனா வந்தது. பறவைகளின் இறகின் அடிப்பாகத்தைக் கூர்மையாகச் சீவி அதை மையில் தோய்த்து எழுதினார்கள். அந்தப் பேனாவாகிய இறகின் அடியைக் கூர்மையாகச் சீவுவதற்காகச் சிறிய கத்தி இருக்கும். பேனாவைச் சீவ உபயோகப்பட்டதால் அதற்குப் பேனாக் கத்தி என்ற பெயர் வந்தது. பூர்ஐ பத்திரத்தில் ஒருவகைத் தூரிகையால் பழங்காலத்தில் எழுதினார்கள்; வடநாட்டில் அதிகமாக எழுதினார்கள். பிறகு, இரும்பு முள் வந்தது. அந்த முள்ளுக்கு நிப் (Nib) என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/98&oldid=1151475" இலிருந்து மீள்விக்கப்பட்டது