பக்கம்:புது மெருகு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பந்தச் சர்க்கரை

105

பக்ஷபாதம் உடையவர்கள் என்ற அபவாதம் சமுகத்தைச் சாரும்" என்று பணிவுடன் வேண்டிக்கொண்டார் சம்பந்தச் சர்க்கரை.

ராமப்பையர் சிறிது யோசித்தார்; "சரி; உம்முடைய உயர்ந்த குணத்தை மெச்சுகிறேன். உம்மோடு இருந்த விசேஷத்தால் அவர்களும் விடுதலை பெறட்டும்" என்றார்.

சிறைச்சாலைக் கதவு அகலத் திறந்தது. யாவரும் விடுதலை பெற்றனர்.

புலவர் சர்க்கரைவள்ளலோடு ஆணூருக்குச் சென்று அவருடைய உபசாரத்தைப் பெற்றுச் சில காலம் தங்கினான். "தங்களுக்கு நான் அளித்த பொருள் சிறிதானாலும், நல்லவர்களுக்கு அளிக்கும் ஈகை பன்மடங்கு பயனைத் தருமென்பதற்கு இணங்க, உடனே எங்கள் யாவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தது. எல்லாம் நீங்கள் தந்த வாழ்வு!" என்றார் சர்க்கரை.

"உலகம் உள்ள அளவும் மறவாத செயலை நீங்கள் செய்தீர்கள். உங்கள் புகழ் வாழ்க!" என்றான் புலவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/110&oldid=1549620" இலிருந்து மீள்விக்கப்பட்டது