பக்கம்:புது மெருகு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பூர நாயக்கர்

மீன்தார் கற்பூர நாயக்கருக்குச் சாப்பிடத் தெரியும்: வக்கணையாக உணவு ருசி கண்டு உடம்பை 'மொழு மொழு' வென்று உடம்பை வைத்திருக்கத் தெரியும்; ஆடையாபரணங்களை அணிந்து மினுக்கத் தெரியும்; செக்கச் செவேலென்ற திருமேனியும் வெள்ளை வெளேலென்ற வஸ்திரமும் பட்டுக்கரை அங்கவஸ்திரமும் முறுக்கு மீசையும் பட்டை நாமமுமாக அவர் கட்டிலில் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தால் நிச்சயமாகத் திருஷ்டி விழும் என்பதில் சந்தேகமே இல்லை.

நாயக்கர் தோத்திரப் பிரியர். அவருடைய முன்னோருடைய வீரப்பிரதாபங்களையும், அவர் தாமே பத்து வருஷங்களுக்கு முன் புலி வேட்டைக்குப் போய் நரி வேட்டையாடிய சாமர்த்தியத்தையும், அந்த வேட்டையைக் கொண்டாட அவர் அன்னதானம் செய்த விமரிசையையும் பாராட்டிப் பேசி, ஜமீன்தாருடைய திருவுள்ளத்தில் இடம் பெற்றவர்கள் பலர்.

அவருக்கு ஒரு மந்திரி. அநேகமாகப் பணக்காரர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் முன்னடியாராக இத்தகைய மந்திரிகள் இருப்பது எங்கும் வழக்கந்தான். இவரும் முதலில் ஜமீன்தாரருக்கு இங்கிதமாகப் பேசி அவர் பிரியத்துக்கு ஆளானவரே. வாய்ச் சவடால் அடிப்பதிலும் யாரையும் மடக்கிப் பேசுவதிலும் ஆள் மிகவும் கெட்டீக்காரர். தெரியாத விஷயங்களில் எல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/120&oldid=1549643" இலிருந்து மீள்விக்கப்பட்டது