பக்கம்:புது மெருகு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பூர நாயக்கர்

119

மந்திரி மௌனமாக நின்றார். அவர் சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"என்னப்பா சும்மா நிற்கிறாய்? பாட்டு எப்படி?"

ஜமீன்தாரே இப்படிக் கேட்கும்போது மந்திரி எப்படி மௌனத்தைக் கலைக்காமல் இருக்கமுடியும்?

"எங்கே, பாட்டை இன்னும் ஒரு தரம் சொல்லும்" என்றார் மந்திரி.

"கோவைப் பழம்போல
     சிவந்த நாயக்கரே
குண்டு மணிபோல
     சிவந்த நாயக்கரே
காவிக் கல்லைப்போல
     சிவந்த நாயக்கரே
கற்பூர நாயக்கரே"

என்று பாட்டு முழுவதையும் சொன்னார் புலவர்.

மந்திரி எதையோ கண்டுபிடித்தவரைப் போலத் திடீரென்று, "அதுதான் சொல்கிறேன்" என்று சொல்லி ஜமீன்தாரைப் பார்த்தார்.

மந்திரி என்ன சொல்கிறார் என்பதை அவர் அறிய விரும்பினார்.

"இதிலே குண்டுமணி இருக்கிறதே, அதைப் பற்றித்தான் சொல்கிறேன். குண்டுமணியில் கொஞ்சம் கறுப்பு இருக்கிறதே; அதை வைத்தது சரியா?" என்று கூறி வெற்றி மிடுக்கோடு புலவரை ஏறிட்டுப் பார்த்தார்.

'புலவர் இடி விழுந்தது போலத் திடுக்கிட்டு முகஞ் சுண்டித் தோல்வியுற்று வந்த வழியே போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/124&oldid=1549647" இலிருந்து மீள்விக்கப்பட்டது