பக்கம்:புது மெருகு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில குறிப்புகள்

125

யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான், உலக மும் கெடுமே.
                                —புறநானூறு, 184.

குடிப்பெருமை:

திணை-வாகை. துறை-அரச வாகை.

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக்கொண்டு எறிந்தானைச் சோழன் மகன் அல்லையென நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக.
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி, வார்கோற்
கொடுமர மறவர் பெரும, கடுமான்
கைவண் தோன்றல், ஐயம் உடையேன்
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர், மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே,
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்,
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
காண்டரு மொய்ம்ப காட்டினை, ஆகலின்
யானே பிழைத்தனன் சிறக்கநின் ஆயுள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/130&oldid=1549657" இலிருந்து மீள்விக்கப்பட்டது