பக்கம்:புது மெருகு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

புது மெருகு

மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
                               —புறநானூறு, 43.

நிர்வாண தேசம்:

மணிமேகலையில் 16-ஆம் காதையாகிய 'ஆதிரை பிச்சையிட்ட காதை' என்பதில் இங்கே உள்ள வரலாற்றுக்கு மூலம் இருக்கிறது.

ப.64 சாதுவன் செய்த உபதேசம்:

மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்:
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உறவோர் களைந்தனர்;
கண்டனை யாகெனக் கடுநகை எய்தி
உடம்புவிட் டோடும் உயிர்உருக் கொண்டோர்
இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய்
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை
செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள்
உற்றதை உணரும் உடல்உயிர் வாழ்வுழி;
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின்
தடிந்தெரி யூட்டினுந் தான்உண ராதெனின்
உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்க
போனார் தமக்கோர் புக்கில்உண் டென்பது
யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்
கடந்துசேட் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை
பூண்ட யாக்கையிற் புகுவது தெளிநீ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/131&oldid=1549658" இலிருந்து மீள்விக்கப்பட்டது