பக்கம்:புது மெருகு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றுகை

முற்றுகை! சாமான்யமான முற்றுகையா என்ன?

முடியுடை மூவேந்தர்களும் சூழ்ந்து- கொண் டிருக்கின்றனர். சேர சோழ பாண்டியரென்னும் அம்மூன்று அரசர்களும் தம்முடைய படைப்பலம் முழுவதையும் திரட்டிக்கொண்டு வந்து பறம்பு மலையைச் சுற்றிக் குவித்திருக்கின்றனர். சேரனுடைய யானைப் படையின் மிகுதியைச் சொல்வதா? சோழனுடைய ஆட்படையைச் சொல்வதா? பாண்டியனுடைய குதிரைப் படையைச் சொல்வதா? எதை அதிகமென்று சொல்வது? இந்தப் படைப் பெருங் கடலினிடையே கூம்பு உயர நிற்கும் கப்பலைப்போலப் பாரியின் பறம்பு மலை நிற்கிறது; அந்த மலை எப்படி அசைவற்று நிற்கிறதோ அப்படியே மலை மேலுள்ள பாரியும் அவனுடைய உயிர்த் தோழரான புலவர்பெருமான் கபிலரும் வீரர்களும் உள்ளத்தில் அச்சம் சிறிதும் இல்லாமல் திண்ணிய நெஞ்சத்தோடு நிற்கின்றனர்.

பறம்புமலையில் அவ்வளவு பகைப்படைகளும் ஏறிச்சென்று போரிடுவதென்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம். முட்புதரும் அடர்ந்த காடும் பிணக்குற்ற கொடிவழிகளும் பாறை வெடிப்புக்களும் நிரம்பிய அம்மலைச்சாரலில் வீரர் ஏறிச்சென்று உச்சியை அடைவதற்குள் யமலோகத்திற்கே ஏறிப் போய் விடுவார்கள்.

வில்லும் வேலும் வாளும் கொண்ட வீரர்கள் மீனினங்களைப்போல மலையடிவாரத்தில் வட்டமிடு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/20&oldid=1548612" இலிருந்து மீள்விக்கப்பட்டது