பக்கம்:புது மெருகு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

புது மெருகு

புகழைக்குறைக்க வழி தேடவேண்டும்' என்று சூழ்ச்சியில் முனைந்தனர் மூவரும். காரணமின்றி அவனுடன் போரிட விரும்பவில்லை.ஒரு காரணத்தை உண்டாக்கிக் கொள்ள எண்ணினர்.

பாரியின் மகளிரைத் தமக்கு மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று மூவேந்தரும் தனித்தனியே ஓலைபோக்கினர். அவர்கள் எதிர்பார்த்ததே நிகழ்ந்தது செல்வச் செருக்கில் மூழ்கிக் கண் மூடிக் கிடக்கும் அவர்கள் வேண்டுகோளை பாரி மறுத்தான். அதன் விளைவாகவே இந்தப் பெரும் போர் மூண்டது. மூன்று மன்னர்களும் ஒருங்கே தம் படைகளைக் கூட்டிப் பறம்பை முற்றுகையிட்டுப் பொருது நின்றனர்.

டைப்பலத்தால் பறம்பை வெல்ல முடியாது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். மேலே என்ன செய்வது? பறம்பு மலைக்கு முன் அவர்கள் உள்ளம் பணிந்து போய், ஊக்கமிழந்து, தருக்கின்றிக் குவிந்தன. யாவரும் கூடி ஆலோசித்தனர். 'இனி நம் அம்புகளை எய்து வீணாக்குவதில் பயன் இல்லை. போர்முறைகளில் இப்போது செய்வதற்கு உரியது இன்னதென்று ஆராயவேண்டும். பகைமன்னர் மதிலை வளைந்த காலத்தில் உள்ளே உணவு செல்லாமல் முற்றுகையிட்டால் போர் செய்யாமலே வெற்றி பெறலாம் என்று போர்க்கலையில் வல்லவர்கள் சொல்வார்கள். அவ்வாறு நாம் இன்னும் சில மாதங்கள் இந்த முற்றுகையைத் தளர்வின்றிச் செய்துவந்தோமானால் மேலுள்ள குடிகளும் வீரர்களும் உணவின்றி வாடுவார்கள். நெல்லும் கரும்பும் வெற்றிலையும் மலையில் இல்லை. கீழிருந்துதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/23&oldid=1548617" இலிருந்து மீள்விக்கப்பட்டது