பக்கம்:புது மெருகு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யமன் வாயில் மண்

37

சந்நிதானத்தில் போய்ச் சொல்லிக்கொள். நீ புலவனென்றால் பல பேருக்குத் தெரிந்திருக்குமே. இங்கே யாரையாவது தெரியுமா?"

இளந்தத்தன் இப்பொழுதானே வெளியே புறப்பட்டிருக்கிறான்? அவனுக்கு யாரைத் தெரியும்?

"ஐயோ! இந்த ஊருக்கே நான் வந்ததில்லையே! இப்பொழுதுதானே வருகிறேன்? எனக்குப் பழக்க மானவர் ஒருவரும் இல்லையே!" என்று புலம்பினான்.

நெடுங்கிள்ளியிடம், 'பகையரசனிடமிருந்து வந்த ஓர் ஒற்றனைச் சிறைப்படுத்தியிருக்கிறேன்' என்ற செய்தி படைத்தலைவனிடமிருந்து சென்றது. அரசன் முன்பின் யோசிக்கவில்லை; "தாமதம் ஏன்? கொன்று விடுங்கள்" என்ற ஆணையை வீசினான்.

'முதற் பரிசு நலங்கிள்ளி தந்தான். இரண்டாம் பரிசு யமனிடம் பெறப்போகிறோம்!' இதுதான் இளங் தத்தன் உள்ளத்தில் நின்ற எண்ணம். அட மனித வாழ்வே! அற்ப சந்தோஷமே! நேற்று அவன் இருந்த இருப்பென்ன! நின்ற நிலை என்ன! வைத்திருந்த நம்பிக்கை என்ன~! உலக முழுவதும் தன்னை வரவேற்கும் கைகளையும் பாராட்டும் வாய்களையும் கற்பனைக் கண்ணாலே கண்டான்; இன்றோ யமன் அவன் முன் நிற்கிறான். எந்தச் சமயத்தில் அவன் தலை தனியே பூமியில் உருளப்போகிறதோ!

எந்த வேளையில் அவன் புறப்பட்டானோ! அவன் தமிழ்நாடு முழுவதும் பிரயாணம் செய்து திரும்ப எண்ணிப் புறப்பட்டிருக்கவேண்டும்; திரும்பாப் பிரயாணத்துக்காகவா அவன் நாள் பார்த்தான்! எவ்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/42&oldid=1548640" இலிருந்து மீள்விக்கப்பட்டது