பக்கம்:புது மெருகு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

புது மெருகு

வளவோ சம்மானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து வரலாமென்ற ஆசையோடு புறப்பட்டான். இந்த உடற்பாரங்கூட இல்லாமல் செய்யுமென்றால் உறையூருக்கு அவன் வந்திருப்பானா?

அவன் கவிதையை மறந்தான்; நலங்கிள்ளியை மறந்தான். உயிர் நின்று ஊசலாட வாழ்நாளின் இறுதி எல்லையிலே நின்றான்.

3

"புறப்படு."

"எங்கே?"

"கொலைக்களத்திற்கு."

"ஆ!" அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் புலவர் வந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டு குதுகலித்தார்கள். தமிழுலக முழுவதும் பெரும் புகழ்பெற்ற சிறந்த கவிஞர் அவர். அரசனை நோக்கிச் செல்லும் அப்புலவரைச் சூழ்ந்த கூட்டம் யமனை நோக்கிச் செல்லும் இளந்தத்தனை அணுகியது. அப்பொழுதுதான் அந்த இளம் புலவன் மூர்ச்சை தீர்ந்து கண் விழித்தான். கோவூர் கிழார் போகிறார் என்பதை அந்தக் கூட்டத்தினரின் பேச்சால் உணர்ந்துகொண்டு ஓலமிட்டான்: "புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/43&oldid=1548899" இலிருந்து மீள்விக்கப்பட்டது