பக்கம்:புது மெருகு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யமன் வாயில் மண்

41

அவர்கள் கடிந்து சொன்னாலும் அது நன்மையைத் தான் விளைவிக்கும்."

"அதைத் தான் நான் வற்புறுத்திச் சொல்கிறேன். இவ்வளவு சாதுவாக இருந்தாலும் அவர்களுடைய பெருமை பெரிது. உங்களைப் போன்ற சிறப்பு அவர்களுக்கும் உண்டு. பகைவர்கள் நாணும்படி தலை நிமிர்ந்து சென்று வெற்றி கொள்ளும் தன்மை அவர்களிடமும் உண்டு. கல்விவீரர்கள் அவர்கள். ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய நும்மனோரைப் போன்ற தலைமை அவர்களுக்கும் உரியதே."

"மிகவும் பொருத்தமான வார்த்தைகள்." கோவூர்கிழார் சிறிது மௌனமாக இருந்தார்.

"பிறர்க்குத் தீதறியாத வாழ்க்கையுடைய அவர்களைக் குற்றவாளிகளாக எண்ணுவது--"

"மடமையிலும் மடமை" என்று வாக்கியத்தை முடித்தான் நெடுங்கிள்ளி.

"அரசே, இன்று இந்த உண்மை இவ்வூரில் பொய்யாகிவிடுமென்று அஞ்சுகிறேன்."

"ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?" என்று திடுக்குற்றுக் கேட்ட்டான் அரசன்.

"ஒரு பாவமும் அறியாத புலவனாகிய இளந்தத்தனைக் கொலைக்களத்துக்குப் போகும் வழியில் கண்டேன். புலவர் உலகமே தூக்கு மரத்தில் தொங்குவது போல அஞ்சினேன். ஓடி வந்தேன் இங்கே. அவன் யான் அறிந்த புலவன்."

கோவூர்கிழார் முன்னம் அப்புலவனை அறியாவிட்டாலும் ஒரு கணத்தில் அவனை அறிந்துகொண்டார் என்பதில் பிழை என்ன? ‘அப்படி அல்ல அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/46&oldid=1548902" இலிருந்து மீள்விக்கப்பட்டது