பக்கம்:புது மெருகு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

புது மெருகு

கடவுள் திருவருள் அது நன்கு நிறைவேறும்படி செய்யவேண்டும்"என்று சொல்லி வாழ்த்தினார் ஆசிரியர்.

பால சந்நியாசியாகிய தேவர் உவகையால் பூரித் தார். தம் ஆசிரியர் பாதத்தில் விழுந்து பணிந்து எழுந்து, அடியேனுக்கு இந்தக் கட்டளை கொடுத் தது பெரிதன்று. தேவரீரே ஆரம்பித்துத் தரவேண் டும்" என்று விநயமாக இரந்து நின்றார்.

அறிவின் தலையெல்லையிலே நின்ற அந்த இளந் துறவியின் அடக்கம் ஆசிரியரின் உள்ளத்தைப் பிணித்தது. அவரது வேண்டுகோளைப் புறக்கணிக்க முடி யுமா?

ஜைனர்கள் அருகன், சித்தன், சாதுக்கள் என் போரையும் தர்மத்தையும் வணங்கித்தான் நூல் தொடங்குதல் மரபு. இவற்றை முறையே அருகசரணம், சித்தசரணம், சாதுசரணம், தர்மசரணம் என்று சொல் வார்கள்.

ஆசிரியர் அருகசரணத்தைப் பாடி முடித்தார். அருக பரமேஷ்டியின் திருவுருவ எழிலை அதில் வருணித்தார்.

'சிவந்த பொன்மலையைப் போலச் சோதி வீசுவது அருக பரமேஷ்டியினது திவ்விய மங்கள விக்கிரகம். அவருடைய திருமேனியிலே அங்கங்கே எழுதினாற் போலவும் அழகமையப் பிதிர்ந்தாற் போலவும் ஆயி ரத்தெட்டு மறுக்கள் திகழ்கின்றன. யாவரும் விரும்பி நோக்குதற்குரிய இளஞ் சூரியனைப் போன்ற தேசு வீசும் அந்த மூர்த்தியின் அடித்தாமரையைத் தேவர் களெல்லாம் முடிமேல் தரிக்கின்றனர். யாமும் நம் சென்னியிலே அணிவோம்' என்று அமைந்தது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/73&oldid=1549176" இலிருந்து மீள்விக்கப்பட்டது