பக்கம்:புது மெருகு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவரும் குருவும்

69

"செம்பொன் வரைமேற் பசும்பொன் எழுத்து
     இட்ட தேபோல்
அம்பொன் பிதிர்வின் மறுஆயிரத்
     தெட்டு அணிந்து
வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு
     மூர்த்தி விண்ணோர்
அம்பொன் முடிமேல் அடித்தாமரை
     சென்னி வைப்பாம்."

[வெம்பும்-யாவரும் விரும்பும். சுடரின்-சூரியனைப் போல. சுடரும்-ஒளிவிடும். மூர்த்தி-திருவுருவத்தையுடையவன்.]

இச் செய்யுளை முடித்து எழுதி மாணாக்கரை அழைத்து அவர் கையில் ஆசீர்வாதம் செய்து அளித் தார். ஆசிரியர் அருகசரணத்தை முடிப்பதற்குள் திருத்தக்க தேவர் சித்தசரணத்தைப் பாடியிருந்தார். ஆசிரியர் அளித்த அச் செய்யுளைப் பணிந்து பெற்றுத் தலைமேல் வைத்துப் படித்தார். "அடியேன் பெற்ற பாக்கியம்! இதனை முன்வைத்துத் தொடங்கும் சீவ கன் சரிதை இடையூறின்றி நிறைவேறும்" என்று ஆனந்தம் பொங்கக் கூறினார். அப்பால், "அடியேன் இயற்றிய சித்தசரணப் பாடலைக் கேட்டருள வேண் டும்" என்று அதனை விண்ணப்பித்தார்.

அந்தப் பாடல் சித்தனுடைய திருவுருவ வர் ணனையாக இருக்கவில்லை. அவனது குணச்சிறப்பைச் சொல்லுவதாக இருந்தது.

'ஈறும் முதலும் இல்லாத மூவுலகத்துள்ள உயிர் களும், கெடுகின்ற சிற்றின்பத்தையே இன்பமெனக் கொண்டு உழலுகின்றன. அவை நிலையாதனவென்று கண்டு துறக்கும்பொழுது, கெடாத பேரின்பத்தை எய்துகின்றன. அந்த இன்பமே தலையாகியது. அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/74&oldid=1549177" இலிருந்து மீள்விக்கப்பட்டது