பக்கம்:புது மெருகு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

புது மெருகு

இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இப்போது தான் உண்மை வெளிவந்தது. தாங்கள் யார்? தாங்கள் இந்த மாதிரி செய்யத் தகாத கூலி வேலையை ஏற்றுக் கொள்வானேன்?" - கேள்விகள் சரமாரியாக வந்தன. கம்பர் மௌனமாக இருந்தார். அவர் கவிதை கலைத்துவிட்டதே!

வேலி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். காலில் விழுந்து வணங்கினாள். கம்பர் உண்மையைச் சொல்லும்படி நேர்ந்து விட்டது. வேலிக்குத் தூக்கமும் வியப்பும் ஆனந்தமும் மாறி மாறி வந்தன. "என் பாக்கியம் மகத்தானது!" என்று குதித்தாள். "ஐயோ! தங்களைக் கூலி வேலை செய்யும்படி ஏவினேனே!" என்று துடித்தாள். "நான் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும்" என்று அழுதாள்.

ன்று கம்பர் அங்கே உணவு உட்கொண்டு தங்கி மறுநாள் புறப்பட்டுவிட்டார். நிச்சயம் இல்லாத லட்சியத்தை நோக்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/95&oldid=1549361" இலிருந்து மீள்விக்கப்பட்டது