பக்கம்:புது மெருகு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வணங்கா முடி

93

மான சமாசாரம் அல்ல' என்று எண்ணி அவர் மௌனமாக இருந்துவிட்டார்.

ஒரு மந்திரி, இவ்வளவு தானா? இதற்கு மேலே சாமர்த்தியமாக ஒன்றும் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

அப்போது சவ்வாது புலவர் சிறிதே கனைத்துக் கொண்டார்.

"என்ன புலவரே, ஏதோ சொல்லப் போகிறீர்கள் போல் இருக்கிறதே!" என்று மந்திரி கேட்டார்.

"ஆம். மகாராஜாவின் முடி வணங்கும் சந்தர்ப்பம் மற்றொன்று எனக்குத் தெரியும்" என்றார்.

எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண் டிருந்தார்கள்.

"வணங்காத மகாராஜாவின் பொன்முடி வணங்கும்; அதுவும் பகை மன்னருடைய முன்னிலையில் வணங்கும்" என்றார்.

அங்கு இருந்தவர்களுக்குப் புலவர் கருத்து விளங்கவில்லை. அரசரும் யோசனையில் ஆழ்ந்தார்.

"நம்முடைய மகாராஜா பகைமன்னர் முன்னிலை யில் தலை வணங்குவாரென்றா சொல்கிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டார்.

" ஆம், நம்முடைய வணங்கா முடியையுடைய சேதுபதி மகாராஜாவின் திருமுடி பகைவர் முன்னிலையில் வணங்கும் என்றுதான் சொல்கிறேன்."

"இவர் என்ன இப்படி என்னவோ உளருகிறாரே!' என்று சிலர் நினைத்தனர்.

வித்துவான்கள் சவ்வாதுப் புலவர் யாவரையும் பிரமிப்பில் மூழ்கச் செய்யப் போகிறாரென்றே எதிர்பார்த்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/98&oldid=1549606" இலிருந்து மீள்விக்கப்பட்டது