பக்கம்:புது மெருகு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

புது மெருகு

"எல்லோரும் புகழ்கிறமாதிரி இருக்கக்கூடாது. மகாராஜா தாம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்ததாக இருக்கவேண்டும்" என்று ஒரு மந்திரி சொன்னார்.

வணங்கா முடியையுடைய மகாராஜா வணங்கினதாக ஒரு செய்யுள் சொல்லலாமே" என்று வேறொரு மந்திரி யோசனை கூறினார்.

அப்போது சேதுபதி அரசருக்கு முகத்தில் சிறிது கோபக்குறி தென்பட்டது.

சட்டென்று ஒரு புலவர் பேச்சைத் திருப்பினார்; "சிவபெருமானுக்கு மகாராஜா வணங்கினாலும் அவருடைய திருமுன் உலகமே வணங்கி நிற்கிறது" என்று சாதுரியமாகச் சேதுபதியின் வணங்கா முடியும் வணங்கும் சந்தர்ப்பத்தைப் புலப்படுத்தினார்.

கேட்ட அரசருக்குக் கோபம் அடங்கிவிட்டது. வேறொரு புலவர், "அது மட்டுமா? வேறொரு சமயத்தும் மகாராஜாவின் திருமுடி வளையலாம். ஆனால் அதன் பயன் இன்பம்" என்றார்.

"எந்தச் சமயம்?" என்று மந்திரிகள் ஒருங்கே கேட்டனர்.

புலவர் சிரித்துக்கொண்டே, "இளையார் கலவியிடத்து" என்று சொல்லிச் சிரித்தார். மன்னர் முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது.

மற்றொரு புலவருக்குக் கம்பர் பாடிய பாட்டொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் ஓர் மயிர் வினைஞனைப்பற்றிப் பாடின பாட்டு அது: "ஆரார் தலை வணங்கார்" என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டை நினைத்துப் பார்த்துவிட்டு,'சே! இது உசித-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/97&oldid=1549605" இலிருந்து மீள்விக்கப்பட்டது