பக்கம்:புது வெளிச்சம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்கள் ஒளியுடையதாகி, தோற்றம், பிறர் மதிப்புக்குரியதாயும் மாறுகிறது. இவ்வாறே நாமே தெய்வமாகிவிடின் நமக்குச் சதா அமைதியும் ஆனந்தமும் தவிர வேறு என்ன வேண்டியுமிருக்காது. எதை அறிய வேண்டுமோ அதை அறிந்தோம். எதை அடைய வேண்டுமோ அதை அடைந்தோம். அமைதியும், ஆனந்தமும் இப்போது நமது உடைமையாயிற்று.

கோடீசுவரன் அனுபவிப்பது துன்பமன்றி இன்பமன்று. அவனுடைய உள்ளத்தில் அச்சம் மண்டியிருக்கிறது. புகழ் அவனை நையாண்டி செய்து கொண்டு ஆட்டம் காட்டுகிறது. காமம், வெகுளி, மயக்கம் எனும் மும்மலங்களும் அவனை ஆட் கொண்டுள்ளன. காசே அவனைக் கனவீனப்படுத்துகிறது. பற்றுகள் அவனைப் பாழ்படுத்தி வைக்கின்றன.

நடத்தையாலன்றி 'நிலையான அமரத்வம் காசினால் பெற முடியாது. வேசதாரிச் சாமியார்களை இவன் சரணடைகிறான். காலில் விழுந்து வணங்குகிறான். அவன் கற்சிற்பங்களைச் சுட்டிக்காட்டுகிறான். எனவே தான் பொதுவாகச் சொல்லுகிறேன்; ஒரு மூடனாக இருந்து கொண்டு கோடீசுவரனாக வாழ்வதை விட ஒரு ஆத்மஞானியாக இருந்துகொண்டு உழைத்து வாழ்வதில் மேலான இன்பமிருக்கிறது, என்று.

நடிப்பு வேறு, நடத்தை வேறு. எனவே, நண்பனே! நல்லன. அனைத்தும் உன் நடத்தையில் வெளிப்படுத்து; அதுவே தெய்வீகம். அதுவே அபரோச்சம் புரிந்து கொண்டு புனிதனாகி விடு.



கீர்த்தியினுடைய மாற்றாந் தாயின் பெயர் தான் தரித்திரம் என்பது.

- ஜோஸ்பிலக்

சத்தியம் யாருக்கும் அச்சமூட்டுவது அன்று. ஆயினும் அதைக் கண்டு மனிதர்கள் அஞ்சவே செய்கின்றனர்.

-வெ

100 ➢

கவிஞர் வெள்ளியங்காட்டான்