பக்கம்:புது வெளிச்சம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நிலம், நீர், நெருப்பு பெறும் இம்மூன்றும் உருவத்துடனும் காற்று, ஆகாயம், உருவமின்றியும் வெளியே உள்ளன.

காற்றுதான் உயிர் அனைத்துக்கும் எசமானன்; காற்றில்லையேல் நம் உடலில் 98 டிகிரி வெப்பம் இருக்காமல் போய் விடலாம். காற்றின் குழந்தை நெருப்பு. நெருப்பின் குழந்தைதான் நீர். இவை மூன்றும்மிகினும் குறையினும் நோய் செய்யும், வாதம், பித்தம் சிலேத்தும் என்னும் பெயர் கொண்டு இவை வழங்கி வரும்.

இந்த உடலும் உயிருமல்லாது, இன்னுமொரு உறுப்பற்ற உறுப்பும் நமக்குள் உண்டு. அதன் பெயர் தான் மனம். தமிழில் உள்ளம் எனப்படுகிறது.

உடல், உயிருக்கு இடமளிக்கிறது. உயிர், உள்ளத்திற்கு இடமளிக்கிறது. உள்ளம் வானம் போன்றது. வானத்தில் உதித்து வரும் சூரியனைப் போல் நாம் உள்ளத்தில் சத்தியத்தை உதிக்கச் செய்து கொண்டால் நாம் தெய்வமாகிறோம். பொய்யை உதிக்கச் செய்து கொண்டால் சோற்றுப் பிண்டங்களாகி நோய், கவலை, கோபதாபம், பொறாமை முதலிய குணங்களுடன் உருவங்களை வணங்கிக் கொண்டு சீரழிவுடன் இப்போதுள்ளவாறே, 'பிறந்தான். இருந்தான், செத்தான்' எனும் மூன்று சொற்களில் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்களாகிறோம்.

சத்தியத்தை உபநிசத்து, 'சூரியன்' என்றே உரைக்கிறது. 'தத்யத் தத்சத்ய மலெளன சதித்யே’, என்று ஆனதனால்தான் சத்தியத்தைப் பிரம்மம் என்று பழங்கால முனிவர்கள் பெயரிட்டழைத்தனர். 'எதஸ்ய பிராமனே நாம சத்ய மிதி' என்று...

சத்தியத்தை உள்ளத்தில் வைத்துக் கொண்டோமானால், மற்ற எல்லா நல்ஒழுக்கங்களும் இயல்பாக நமக்கு அமைந்துவிடுகிறது. எனவேதான், 'பிரம்மஹிரப் ஜோதி பரம்' - பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகிறான் என்றும், மேலும் விளக்கம் செய்கிறது.

'அகத்தினழகு முகத்தில்' என்று ஒரு பழமொழி தமிழில் இருப்பது எல்லாரும் அறிந்ததுதான். நாம் சத்தியத்தை உள்ளத்தில் வைத்து உரையில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தால், நம்முடைய அகத்தழகு முகத்தில் பிரதிபலிக்கும் பொலிவு பெற்றுக்பெற்றுக்-

புது வெளிச்சம்

99