பக்கம்:புது வெளிச்சம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞானனுபவங்களை குதிரைச் சாட்டைபோல் என்மேல் தொடுக்கப்பட்டதும் உண்டு.

என்ன செய்வது? சிந்திக்கத் தெரியாத செயல் திறனற்ற மக்களுக்கிடையில் சிக்கிக் கொண்டபின் எல்லாம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும். சரி அது ஒருபுறம் இருந்து கொண்டிருந்த போதிலும் நான் கூறவேண்டியும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றைத் தொடர்ந்து செய்து தீரவேண்டியது என் தவிர்க்க முடியாத கடமையல்லவா? அதனால் நான் மேலும் தெளிய வைக்கவே செய்கிறேன்.

வள்ளுவர் கூறுகிறார் உள்ளியது எய்தல் எளிது மன், மற்றுந்தான் உள்ளியது உள்ளப்பெறின் என்று

இந்த ஒரு குறள்பா போதுமே, தமிழ் மக்கள் நிர்சிந்தையாக அமோகமாக வாழ, வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட இதை இந்த நாட்டில் எத்தனை பேர் புரிந்து கொண்டுள்ளனர்? புரிந்து கொண்டவர்களால் சாதிக்க முடியாததெனக் கூற எந்த ஒரு செயல்தான். இருக்கமுடியும்?

மற்றும் தான் உள்ளத்தில் உள்ளல் - அதுதான் தியானம். அப்போது நாம் உள்ளியதை எளிதாக எய்துவது நூற்றுக்குநூறு சதம் உண்மை. துணிவுள்ள இளைஞனே இதை நீயே பரிசோதனை செய்துபார்.

ஆணும் பெண்ணுமாகவுள்ள ஒவ்வொரு மனுச மனுசிகளுக்கும் 'அந்தக் கரணங்கள்' என நான்குள்ளன என்று ஆன்றோர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அவற்றை மனம், புத்தி, சித்தம், ஒங்காரம் அல்லது ஆங்காரம் என்று பெயரிட்டுக் கூறப்படுகின்றன. மெய், வாய், கண், செவி, மூக்கு என நம்முடலிலுள்ள உறுப்புகளுக்கு அறிகருவிகள் என்பது பொதுவான பெயர். உலகிலுள்ள அனைத்தையும் இவ்வைந்து அறிகருவிகளும் இன்னின்னதென மனித மனத்தில் படியச் செய்கிறது. அப்படிமானத்துக்குப் பெயர் புத்தி அல்லது அறிவு எனப்படும். மனதில் படிந்த இவ்வறிவில் நல்லது, கெட்டது என இருவகையும் உண்டு. நல்லது என உள்ளன அனைத்தும் கொண்டு ஒழுகுவது அல்லது ஆசை வயப்பட்டுக் கெட்டது என உள்ளனவற்றைக் கொண்டு ஒழுகுவது

46

கவிஞர் வெள்ளியங்காட்டான்