பக்கம்:புது வெளிச்சம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'சீவ னெனவும் சிவெனனவும் வேறில்லை எனத் திருமந்திரம் ஐயம் திரிபறச் சொல்வதிலிருந்து இனி ஐம்புலனடக்கிச் சிவ யோகம் செய்தல் எனும் பொருள் அவசியமிழந்து விடுகிறது என்று நாம் சரியான முடிவிற்கு வந்து விடுகிறோம்.

'அனுட்டானம்' எனும் சொல்லுக்கும் நான்கு பொருள் இருப்பினும், நிலைநிறுத்தல் என்பது மட்டும் சரியான பொருளெனக் கொள்ளலாம். ஆம் சிந்தித்தலைக் கடந்தும் நினைவைக் கடந்தும் நிலைநிறுத்தல் எனும் சொல் பொருள் படுகிறது. இவற்றைப் பற்றி ஆராயாத இன்றைய அறிவாளிகளாகத் தம்மை எண்ணிக் கொண்டுள்ள ஒரு சிலர் தியானம் எனும் சொல்லை வீண்படுத்துகின்றனர்.

ஏதாவது ஒரு உருவத்தை தம் மனக்கண்முன் தோற்றுவித்துக் கொண்டு, அந்த உருவத்திற்கிட்டு வழங்கும் பெயரை வாயால் உச்சரிப்பது மட்டும் தான் தியானம் எனக்கூறி, ஏற்கனவே அறியாதவர்களை மேலும் கொஞ்சம் அறியாமையில் ஆழ்த்தி விடுகின்றனர். இது எத்தகையது எனில் பிறவிக் குருடாயுள்ளவனுக்குப் பிறந்தபின் குருடானவன் வழிகாட்டுவது போலுள்ளது. எனத்தான் கூற வேண்டும்.

உண்மையைக் கூறினால் இந்தச் சொல்லை வைத்துக் கொண்டுதான் மேல்நாட்டில் பலரும் சமுதாயத்துக்கு வேண்டிய அனைத்தையும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொடுத்துக் கொண்டுள்ளனர் ஆல்ப்பெர்ட் ஐன்ஸ்டீன் சாதனைகள்; ஆல்வாய் எடிசன் சாதனைகள் அனைத்தும் இந்தத் தியானத்தினால்தான் சாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பலரும் பற்பல நூதனப் பொருள்களையும் சாதித்துக் கொண்டுள்ளனர். ஆனால் அறியாமைச் சாத்தானால் பீடிக்கப்பட்டிருக்கும் நமது மாபெரும் பாரத தேசம், இந்த அருமைச் சொல்லின் உண்மையான பொருளை முழுக்க முழுக்க இழந்துவிட்டதுமன்றி தவறாகவும் செயல்படுத்துகிறது.

நான் இப்படிக் கூறும்போது இதைக் கேட்கும் சகோதரச் சினச் சேமிப்பாளன், கால்பந்தயக்காரன்களுக்கு சகிப்புத்தன்மை கழன்று விடுவதும் உண்டு. உடனே தத்தம் அப்பாரு, அப்பிச்சிகளின்

புது வெளிச்சம்

45