பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:م

பாசறை ஒலக்கம் 8?

அமர வேண்டும், அமர வேண்டும் ' என்று உயர்ந்த ஆதனம் ஒன்றைக் காட்டினன். கபிலர் அமர்ந்தார்.

" தங்களைக் காணும் பேறு இன்று மிக அருமை யாகக் கிடைத்தது. போரில் வெற்றி பெற்றேன். அதனுல் யாவரும் விழாக் கொண்டாடுகிருேம். ஆனல் இன்று அதைவிடப் பெரிய விழாவாகி விட்டது. தங்க ளுடைய வரவால் நான் பெறற்கரிய பேறு பெற்றேன். இவ்வளவு காலமாகத் தங்களுடைய புகழைக் கேட் டிருக்கிறேன். எத்தனையோ புலவர்கள் வஞ்சி மா நகரத்துக்கு வந்திருக்கிருர்கள். தாங்கள் ஒருமுறை யேனும் வந்ததில்லை. அரண்மனையில் பலரும் கூடிய அவைக்களத்தில் தங்களுக்கு உரிய மதிப்பை அளித்துப் பாராட்டும் பாக்கியத்தை இதுவரையில் நான் பெற வில்லை. தாங்கள் எப்போதும் அருகிலே இருக்கும் படியான பேறு பெற்ற பாரி குறு நில மன்னன் ஆலுைம் அவனுடைய பெருமை மிகப் பெரிது. தங்கள் வருகையை முன்பே தெரிவித்து, வஞ்சி மா நகரத்தினர் தங்களை வரவேற்று வாழ்த்திப் பெருமை கொள்ளும் படி வந்திருக்கலாமே !'

  1. -

சேரமான் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தார் கபிலர். பாரியைப் பற்றிய எண்ணந்தான் அவருக்கு உண்டாயிற்று. சேரமானும் அவனைப் பற்றிச் சொன்னன் அல்லவா? அந்தப் பாரி உயிரோடு இருந்தால் அவர் இங்கே வந்திருப்பாரா?

பாரி முடியுடைய மன்னன் அல்லன் ; சிறிய நாட்டை உடையவன்தான். ஆயினும் அவன் நாடு,