பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புது வெள்ளம்

தொழிற்கை என்று சொல்வார்கள். அன்று அந்தப் பாடினி தொழிற்கையைக் காட்டவில்லை. தன் எழிற் கையை, வெறுங் கையை, காட்டினுள். பாரியினது வேலைப் பாடினுள். நிலவைப் போல வெள்ளொளி வீசும் வேல் என்று பாடினுள். நிலா எங்கும் பரந்து ஒளிர்வது போல வேலின் புகழ் எங்கும் பரவி யிருக்கிற தென்று பாடினுள். இப்படி நிலவின் அன்ன வெள்வே?லப் பாடிய பாடினி அமைதியாக இருந்து தன் வெண்கையை முழவிற்கு ஏற்பத் தாளம் போட்டு வீசிளுள். ஆடவில்லை. அன்று நடந்த விழாவை, பாடினியின் வெண்கை விழாவை, இப்போது கபிலர் நினைத்துப் பார்த்தார். இங்கும் ஆரவாரம் இருந்தாலும் அமைதியாக இருப்பதை உணர்ந்தார்.

கபிலரைக் கண்டவுடன் அரசனுடன் இருந்தவர் களில் ஒருவர் அவரை வரவேற்ருர். அங்கே இருந்த வர்களில் யாரும் அவரை முன்பு கண்டதில்லை. தாங்கள் யார்?' என்று வரவேற்றவர் கேட்டார்.

கபிலன் என்று என்னைச் சொல்வார்கள்' என்ருர் புலவர், 'ஆ பொய்யா வாய் மொழிக் கபிலரா!' அந்தப் படைத் தலைவர் வியப்பில் ஆழ்ந் தார். கபிலரை நேரிலே பாராவிட்டாலும் அவர் புலமையைப் பற்றிய புகழ் எங்கும் பரந்திருந்தது. அதனுல்தான் அவர் திடுக்கிட்டார். உடனே அவரை அரசனுக்கு அருகே அழைத்துச் சென்று, 'புலவர் பெருமான் கபிலர்' என்ருர். அரசன் எழுந்து நின்ருன்.