பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் 85

பார்த்துக் கொண்டே போளுர். எல்லாவற்றையும் விடப் பெரிய கூடாரம்-படவீடு-ஒன்று பாசறையின் நடுவிலே இருந்தது. அதன்மேல் பெரிய விற்கொடி பறந்தது. அதுதான் அரசன் தங்கியிருக்கும் இடமாக இருக்க வேண்டும் என்று புலவர் ஊகித்தார். அதனை அணுகும்போது உள்ளே பாட்டொலி கேட்டது. கபிலர் மெல்ல அந்தக் கூடாரத்துள் நுழைந்தார்.

சேர அரசன் உயர்ந்த ஆதனத்தில் வீற்றிருந் தான். அருகிலே படைத் தலைவர்களும் அமைச்சர் களும் அமர்ந்திருந்தார்கள். வீரர்கள் சிலர் சற்று எட்டி நின்று கொண்டிருந்தார்கள். யாரோ பாணன் யாழை மீட்டிப் பாடிக்கொண்டிருந்தான். 5 *

போர்க் களத்தில் புலால் நாற்றம் வீசும் பாசறை யிலே சேரன் இருப்பதாகவே தோன்றவில்லை. அங்கிருந்த அலங்காரங்களும் அமைதியும் உவகையும் மணமும் போர்க்களத்தினிடையே இருக்கிருேம் என்ற நினைவே உண்டாகாமல் செய்து விட்டன. அரசன் இயல்பாகத் தன் அரண்மனையில் கொலு வீற்றிருப்பது போன்ற தோற்றமாக இருந்தது அது.

அவர் அப்போது பாரியின் ஒலக்கத்தை நினைத்துக் கொண்டார். ஒரு நாள் அவனைத் தேடிக்கொண்டு ஒரு விறலி வந்தாள். ஆடல் பாடலில் வல்லவள் அவள். அவள் அன்று ஆடவில்லை. பாரியின் முன் பாடினள். முழவு முழங்கியது. மிருதங்க ஒலிக்கு ஏற்பக் கையால் தாளம் போட்டாள் அவள். அந்தக் கையால் அவள் முத்திரைகளைக் காட்டி ஆடும் ஆற்றல் உள்ளவள். முத்திரை காட்டும் கையைத்