பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புது வெள்ளம்

வெற்றியைக் கொண்டாடிக்கொண் டிருந்தான். கபிலர் நேரே அந்தப் பாசறைக்கே போளுர். போர்க்களத்தின் வழியே சென்ருர், போர்க்களம் முழுவதும் ஒரே பிணக்காடு. யானைகளின் உடம்புகள் குன்றுகளைப் போல நெடுகக் கிடந்தன. வாளிளுல் வெட்டுண்டும் வேலினுற் குத்துண்டும் சிதைந்த உறுப்புக்களுடன் அவை கிடந்தன. இந்தப் பிண நாற்றம் காத தூரம் வீசியது.

மெல்லப் பாசறையை வந்து அடைந்தார் கபிலர்.

பல கூடாரங்கள் அங்கே இருந்தன. பாசறைக் குள்ளே புகுந்தார். எந்தத் திக்கை நோக்கிலுைம் ஆரவாரமாக இருந்தது. ஒள் வாளினலே வெட்டுண்ட களிறுகளின் புலால் நாற்றம் வீசுகின்ற பாசறையானுலும் உள்ளே புகுந்தால் ஏதோ விழா நடக்கின்ற சிறிய ஊரைப்போல இருந்தது. வெளியிலே போர்க்களத் தைப் பாார்த்தபோது, எத்தனை படைகள் படபடப் புடனும் வேகத்துடனும் சினத்துடனும் முட்டியும் மோதியும் போராடியிருக்க வேண்டும் என்று தோன் றியது. அத்தனை படபடப்போடு போர் செய்த வீரர் களே இப்போது பாசறையில் உள்ள தங்கள். கூடாரங்களில் சிறிதும் பரபரப்பின்றிப் பாடியும் சிரித்தும் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந் தார்கள்.

படை வீரர்கள் தங்கியிருந்த இடங்களைத் தாண்டிச் சென்ருர். சில படைத் தலைவர்களுடைய இருக்கைகள் இடையே இருந்தன. அவை சற்றுப் பெரியவைகளாக இருந்தன. அவற்றை யெல்லாம்