பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் 83

போய்விட்டான். அவனை நினைந்து நினைந்து ஏங்கிக் கொண்டிருப்பதைவிட, அவனைப் போன்ற வள்ளல் என்று சொல்கிருர்களே, அந்தச் சேரமானப் போய்ப் பார்த்து வரலாம் என்ற யோசனை அவருக்கு உண்டாயிற்று. -

பாரி வாழ்ந்திருந்த காலத்தில் வேறு யாரிடமும் சென்று கை நீட்டாமல் வாழ்ந்தோம். இப்போது வேறு ஒரு மன்னனிடம் சென்று பரிசில் பெறுவதா? என்று மற்ருேர் எண்ணம் எழுந்தது.

நாம் பரிசில் பெறுவதற்காகப் போகவேண்டாம். இத்தனை பேர் அவனுடைய கொடையைப் பாராட்டிப் பேசும்போது நாமும் சென்று அதனைப் பார்த்து வாழ்த்திவிட்டு வரலாமே! அதில் இழுக்கு ஒன்றும் இல்லையே! பாரியைப் பாராமல் வெறிச்சென்றிருக்கும் கண்களுக்கு அவனைப் பார்த்தாவது ஆறுதல் உண்டா கட்டும். பாரியின் ஈகையைப் பாட வழி இல்லாமல் அடைத்துப்போன நாக்கு, அவன் உண்மையிலே ஈகைத்தன்மை உடையவகைத் தோன்றில்ை சில பாடல்களைப் பாடட்டுமே. இதல்ை நம்மிடம் உள்ளது யாதும் குறையாது. ஆதலால் கட்டாயம் போய் வரவேண்டும் என்று தீர்மானித்தார். புறப்பட்டு விட்டார்.

  • அப்போது சேரமான் செல்வக் கடுங்கோ வாழி யாதன் ஒரு போரில் வெற்றி பெற்றிருந்தான். இன்னும் களத்திலிருந்து வஞ்சிமா நகருக்கு வந்து சேரவில்லை. போர்க்களத்தைச் சார்ந்த பாசறையிலே