பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம்

நல்லிசைச் சான்ருேராகிய புலவர்களுக்குள் கபிலருக்கு உள்ள பெருமை வேறு எந்தப் புலவருக்கும் இல்லை. அவரைப் பிற புலவர்கள் தம்முடைய பாட் டிலே வைத்துப் பாராட்டி யிருக்கிறர்கள். சங்க காலத்து நூல்களிலே மூன்று வரிசைகள் உண்டு. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்பவை அவை. அந்த மூன்று வரிசை களிலும் கபிலருடைய பாடல்கள் இருக்கின்றன.

கபிலர் பாரியின் அவைக்களப் புலவராக இருந் தார். பறம்பு நாட்டுக்குத் தலைவகை விளங்கினவன் வேள் பாரி. கபிலருக்கும் பாரிக்கும் இருந்த நட்பு மிகச் சிறந்தது.

பாரி இறந்தான். அவனுடைய பிரிவாற்ருமல் கபிலர் மிக வருந்தினர். அவனைப் போன்ற வள்ளலை இனி எங்கே காணப்போகிருேம் என்று ஏங்கினர்.

புலவர் பலர் சேர நாட்டுக்குச் சென்று வந்த போது அங்குள்ள சேர மன்னன் ஈகையிற் சிறந்தவ னென்றும், உயர் குணங்கள் நிறைந்தவனென்றும் சொன்னர்கள். சேரமானுடைய புகழைச் சொல்லச் சொல்ல, உலகிலிருந்து ஈகை அடியோடு ஒழிந்து போகவில்லை என்ற ஆறுதல் கபிலருக்கு உண்டா யிற்று. இனிமேல் பாரியை நாம் பார்க்கப் போவ தில்லை. திரும்பி வாராத மேல் உலகத்துக்கு அவன்