பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Χ புதி வெள்ளம்

தலும் அவனிடம் இல்லே அவனுடைய பெருவண்மை ஒவ்வொரு தடவையிலும் குன்ருமல் விளங்குகிறது.

இந்த மூன்று இயல்புகளேயும் கபிலர் சுருக்கமாகப் பாடுகிருர்,

ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மாவள் வரியனே.

இந்தச் சொற்கள் அட்சர லட்சம் பெறும் என்று சொல்லவேண்டும். இந்த முறையில் கொடுப்பவர்கள் இருப் பார்களா என்ற ஆராய்ச்சியில் நாம் இப்போது புக வேண்டாம். கொடுப்பவனுடைய உள்ளப் பான்மை இப்படி இருக்கவேண்டும் என்று நுணுகி ஆராய்ந்து சொன்னுனே புலவன், அவனுடைய அற்புதமான உணர்ச்சியையும் கற்பனையையும் நாம் பாராட்டலாம் அல்லவா? அதில் நமக்கு லோபத்தனம் வேண்டாமே!

அரசர்களிடம் பரிசில் பெறும் இரவலர்கள் யார்? உடம்பால் உழைக்கத் தொழில் கிடைக்காமல், சோறு காணுமல் பிச்சை வாங்கித் திரியும் மக்கள் அல்ல. தாம் பெற்றதைத் தங்களேச் சார்ந்தாருக்கும் பிறருக்கும் அப்பொழுதப்பொழுது கொடுத்து விட்டு வறுமையை வேண்டுமென்றே வரவேற்கும் கலைஞர்களேயே இரவலர்க ளாகக் காண்கிருேம். ஏடும், யாழும் அணியாக ஏந்தும் கைகளிலே வேறு பொருள்களே ஏந்துவது சுமையென்று அவர்கள் எண்ணினர்கள் போலும்! மன்னர்கள் ஈட்டிய பொருளே எந்தச் சமயத்திலும் பெறலாம் என்ற துணிவு கலைஞர்களுக்கு இருந்தமையால் அவர்கள் எவ்வளவு பெற்ருலும் அவ்வளவையும் உதறி விட்டு அடுத்த நாள் தாமும் தம் புலமையும் வறுமையுமாக கின்ருர்கள்.

புலவர்களுடைய பெருமிதத்தை ஒரு பாட்டிலே காண் கிருேம். கபிலர் என்னும் புலவர் பெருமான் பாடிய பாட்டு அது. 'பாரி என்னும் வள்ளல் என்னுடைய தலைவன். அவன் இறந்துவிட்டான். அவனிடம் இருந்த குணங்கள் உன்னிடம் உள்ளன என்று கேள்வியுற்றேன். பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். இங்கே வந்து பரிசில்