பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை xi

பெற்றுப் போகலாம் என்று வரவில்லை. அதற்காக உன்னே அளவுக்கு மிஞ்சிப் புகழவும் வரவில்லே. உண்மையைச் சொல்வேன்' என்று சேர மன்ன&னப் பார்த்து அவர் பேசுகிரு.ர்.

பாணர்கள் யாழ் வாசித்துப் பாடுகிருர்கள். பேர் யாழ் என்ற ஒரு வகை யாழை ஒரு பாட்டிலே காண்கிருேம். பல காலமாக வாசித்து வாசித்துப் பழக்கப் பட்ட யாழிலே பாணர்கள் இசை கூட்டிப் பாடுகிருர்கள். அவர்களுடைய குரலோடு அந்த யாழின் இசை ஒன்றுபட்டு இசைக்கின்றது. பாலேப் பண்ணேப் பாடுகிருர்கள். தழிஞ்சித் துறையில் அமைந்த பாட்டைப் பாடுகிருர்கள். அவர்கள் கையிலுள்ள யாழ்தான் எப்படிப் பேசுகிறது : பாணர்களின் ஏவல் களுக்கு அடங்கி அவர்கள் பணிக்கும் வண்ணம் அது ஒலிக்கிறது. சுரஸ்தானங்கள் அவர்கள் நினைத்தபடி யெல்லாம் பேசுகின்றன. அதனுல், பணி தொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ்' என்று புலவர் அந்த யாழைப் பாராட்டுகிரு.ர்.

சிலர் முழவு வாசிக்கிருர்கள். அந்த முழவில் ஒரு பக்கத்தில் ஒரு வகை மண் பூசியிருக்கிருர்கள். பல கால மாக வாசிக்காமல் இருந்தால் அந்த மண் கெட்டுப் போப் விடுகிறது. ஆடிப்பாடும் விறலியை மூன்று பாடல்களில் காண்கிருேம். பல வளேகளேச் சிறு பெண்ணுக இருந்தபோது அணிந்திருந்த அவள் இப்போது ஆடவேண்டி யிருப்பதால் சில வளேகளேயே அணிந்திருக்கிருள். அவள் சில சமயங் களில் அபிநயம் பிடித்து ஆடுகிருள். சில சமயங்களில் ஆடாமல் பாடுகிருள். சேரனுடைய வேலேப் புகழ்ந்து பாடு கிருள். அபிநயம் பிடிக்கும் தன் கைகளால் மிருதங்கத் துக்கு ஏற்றபடி தாளம் போடுகிருள். அவள் கை அபிநயம் பிடிக்கும்போது தொழிற் கையாக இருக்கும். இப்போது அபிநயத்தில் ஈடுபடாமல் இருப்பதால் வெண் கை என்று புலவரால் சொல்லப் பெறுகிறது. பாடினி என்றும், விறலி' யென்றும் அவளே விளிக்கிருர்கள். விறலியைப் பார்த்து, 'இன்னுரிடம் சென்ருல் பரிசு பெறலாம்' என்ற முறையில் சொல்வதாக அமையும் பாடலுக்கு விறலியாற்றுப்படை என்று பெயர். புறப்பொருளில் வரும் துறைகளில் அதுவும்: