பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii புது வெள்ளம்

ஒன்று. இந்தப் புத்தகத்தில் இரண்டு விறலியாற்றுப் படைகள் இருக்கின்றன. -

நாட்டு மக்களே இன்பவாழ்வு வாழும்படியாகச் செய்து காவல் புரிவது மன்னர் கடமை. சேரர்களின் ஆ திமுறை யைப் பற்றிய சில செய்திகளே இந்தப் பாடல்களில் பெற லாம். சேரநாடு மலேவளம் சிறந்த நாடு. அருவிகளாலும் ஆறுகளாலும் நீர்வளம் பெற்ற நாடு, சேரநாட்டு லேயிலே தோன்றி மேல் கடலிலே சென்று சேரும் போற்றை ஒரு புலவர் வர்ணிக்கிருர், கோடையில் வெப்பம் மிகுதியாகி அருவிகள் வற்றிப்போலுைம் அந்த ஆற்றில் வெள்ளம் வருமாம். புது வெள்ளம் வரும்போது தழைகளேயெல்லாம் அடித்துக் கொண்டு வேகமாக வருகிறது. அதைப் பார்த் தால் வறுமை என்னும் பகைவனேச் சாடுவதற்கு விரர்கள் தழைமாலே சூடி ஆரவாரத்தோடு வருவதுபோல இருக் கிறது. சந்தனத்தையும் அகிலேயும் அடித்துக்கொண்டு நுங்கும் நுரையுமாகச் செம்புனல் வருகிறது. காம்பை நிலத்தில் பாய்ந்து செழிக்க வைக்கிறது. நல்ல புலங்களி லெல்லாம் பாய்ந்து வளத்தை அதிகப்படுத்துகிறது.

இத்தகைய மலைவளமும் நீர்வளமும் இருத்தலால் நாடு செல்வமுடையதாக விளங்குகிறது. இயற்கைவளம் இருப் பினும் ஆட்சிமுறை நன்ருக அமைந்தால்தான் அது மக் களுக்குப் பயன்படும். சேர அரசர் நாடுகாவலேத் திறம்பட ஆற்றினர்கள். மக்களுக்கு மூன்று வகையான பகைகள் உண்டு. அகப்பகை இரண்டு; புறப்பகை ஒன்று. பசியும் பிணியும் அகப்பகைகள்; வேற்று நாட்டுப் பகைவர் புறப்பகை. தக்கவண்ணம் நீர்வளம் நிலவளத்தைப் பெருகச் செய்து அரசன் ஆட்சி புரிந்தால் அகப்பகைகளாகிய இரண்டும் ஒழிந்துவிடும். அவற்றை அழிப்பதையே உயர்ந்த வெற்றியாகச் சேரர் கருதினர். அடுத்தது பகைவரை வெல்லும் வெற்றி. ஒர் அரசன் தன் நாட்டுக் குடிமக்களே வறுமையாலும் பசியாலும் நடுங்காமல் காப்பாற்றினன். அதனால் அவன் மக்களுடைய அன்புக்குப் பாத்திரமானன். பகைவர்களோடு செய்த போர்களில் வெற்றிமேல் வெற்றி பெற்ருன். குடி மக்களின் நடுக்கத்தைப் போக்கியதுதான் அவன் பெற்ற முதல் வெற்றி. அதுவே பின் பெற்ற வெற்றி களுக்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது. அதல்ை அந்தச்