பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை xiii

செயலே, 'துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” என்று ஒரு புலவர் பாராட்டுகிரு.ர்.

ஒர் அரசன் தன் படைவீரர்களே நாட்டின் அதிகாரி களாக்கி அந்த அந்தப் பகுதிகளேப் பாதுகாக்கும்படி செய் தான். ஆக்க வேலைகளில் முழு மனத்தோடு ஈடுபட்ட அந்த வீரர்கள் போரையே மறந்துவிட்டார்கள். அம்பையும் வில்லையும் மறந்தார்கள். இப்படிச் செய்து அரசன் காட்டைப் புரந்தமையால் நாடு முழுவதும் விளேவு முட்டுருமல் திருமகள் விலாசம் பெருகியது. குடிமக்களுக்கு எந்த விதமான துன் பமும் இல்லை; பகைவரால் உண்டாகும் கொடுமையும் இல்லே. தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டவர்களேச் சிறிதும் தீங்கின்றிப் பாதுகாப்பதையே தன் லட்சியமாகக் கொண் டிருந்தான் மன்னன்.

குடிமக்கள் வருத்தமின்றி வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையைப் பேரெழில் வாழ்க்கை என்று ஒரு புலவர் சிறப் பிக்கிருர். அவர்கள் வாழும் ஊர்களில் துயரமே இல்லே. 'புலம்பா உறையுள்” என்று அவற்றைப் பாடுகிருர் புலவர். நல்ல விளேச்சலும் அரசாட்சியும் இருக்கும்போது குடி மக்களுக்கு என்ன குறை? ஆற்றிலே புது வெள்ளம் வரும் போது அவர்கள் அதிலே நீந்தியும் ஆடியும் விழா அயர் கிருர்கள். பேய்க்கரும்பினால் தெப்பம் கட்டி அதைச் செலுத்தி மகிழ்கிருர்கள். அந்த விழா ஒரே ஆரவாரமாக இருக்கிறது. வேனிற்காலத்தில் பூம் பொழிலில் தங்கி இன் புறுகிருர்கள். தாம் மட்டும் நுகரும் இயல்பு அவர்களிடம் இல்லே. சுற்றத்தாரோடு உண்டு இனிது நுகரும் செல்வர் களாகக் குடிமக்கள் வாழ்கிருர்கள்.

சேர அரசர்கள் பகையை அழித்து வெல்லும் வெந்திறல் வேந்தர்களாக இருக்கிருர்கள். மார்பிலே தங்கள் அடையாள மாலேயாகிய பனேமாலேயை அணிகிருர்கள். வேறு மாலே களேயும் புனேகிருர்கள். மார்பிலே சந்தனம் பூசிக் கொள் கிருர்கள். அந்த மார்பில் அழகான கோடுகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. காலிலே பெரிய கழலே அணிகிருர் கள். அவர்கள் ஒலக்கத்தில் ஆடலும் பாடலும் நிக்ழ் கின்றன. இனிய பான வகைகளே நுகர்கிருர்கள். அவர்கள் வணங்கா ஆண்மையை உடையவர்கள். கிரம்பின அறிவும்