பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ziw புது வெள்ளம்

பெரியோர் சொற்களேக் கேட்டு அடங்கும் இயல்பும் பேராசையற்ற தன்மையும் உடையவர்கள்.

பல மனேவியரை மணந்துகொள்ளும் முடிமன்னர் சேரர். அவருடைய மனைவியர் நிரம்பின அறிவுடையோர். நல்ல புகழைப் பெற்ருேர். அழகுடையவர்கள். மக்கட் பேருகிய செல்வத்திற் குறைவில்லாதவர்கள். அந்த மக்களே, "இளந்துணேப் புதல்வர்' என்று போற்றுகிருர் ஒரு புலவர். தம்மைப் பெற்றவர்களுக்கு இம்மையிலும் மறுமை யிலும் துணேயாக உதவுபவர்கள் என்ற குறிப்பை அந்தத் தொடர் புலப்படுத்துகிறது.

நல்ல நாடும், மலேயும், ஆறும், நாடுகாவல் புரியும் மறவரும், பேரெழில் வாழ்க்கையையுடைய குடிமக்களும், பலபொருளும், மனேவியரும், மக்களும், நாற்படையும், தம்மைப் பாராட்டும் புலவரும், பாடி ஆடி இன்புறுத்தும் பாணரும்; விறலியரும் அமைந்த சேர மன்னர்களுடைய செல்வச் சிறப்பை எல்லோரும் பாராட்டுவது வியப்பன்று. அதைப் பலர் புகழ் செல்வம் என்று புலவர் பாராட்டுகிரு.ர். உண்மையைச் சொல்லும் சான்ருேர் மன்னர் புகழைக் கூறுகின்றனர். அம் மன்னர்களின் புகழ் வான்ருேய் நல்லிசையாக நிலவுகிறது. உலகம் உள்ளளவும் இருக்கும் புகழ் அது. "கின் வளன் வாழ்க’ என்றும், "கின் வாழ்க்கை வாழ்க’ என்றும், 'நின்பெயர் வாழ்க" என்றும் வாழ்த்து கிருர்கள் புலவர்கள். மன்னன் வாழ்ந்தால் உலகம் வாழும் என்று சொல்கிருர்கள். ஆற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்து கிருர்கள்.

மன்னருடைய புகழைப் புலவர் வெளியிடும் முறை அழகாக இருக்கிறது. நேரே அவரைப் பார்த்துச் சொல்வது ஒருவகை. பிறரை நோக்கிச் சொல்வது ஒருவகை. முன்னலே சொன்னது முன்னிலைப் பரவல் என்றும் பின்னலே உள்ளது படர்க்கைப் பரவல் என்றும் பெயர் பெறும். இதில் உள்ள எட்டுப் பாடல்களில் முன்னிலைப் பரவலாக அமைந்தவை ஐந்து. விறலியை நோக்கிச் சொல் வனவாக இருப்பவை இரண்டு (5,8); வழிப் போக்கர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்தது ஒன்று (7.)