பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை XV

கபிலர் ஒரு பாட்டில் பாரியைப் பற்றிச் சொல்கிருர். அங்கே, அவனுடைய மலையில் பலாப்பழங்கள் பழுத்துத் தேன் சொரிந்ததையும், அவனுடைய மாளிகை ஒவியம் போலக் காட்சியளித்ததையும் சொல்கிரு.ர். அவனுடைய மனேவியின் அழகையும் இல்லுரிமையையும் நினைக்கிருர். அவன் பெரு விறலையுடையவனென்றும், உன்னத்துப்பகைவ னென்றும், புலரா ஈகையை உடையவனென்றும் கூறு கிருர், அவன் இறந்தான் என்பதை, வாராச் சேட்புலம் படர்ந்தோன்’ என்று உணர்த்தி வருந்துகிருர். அவன் இறந்தமையால் முழவுமண் புலர்ந்தது; இரவலர் இனங் தனர்.

பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்துக் கிடைக்கவில்லே. ஆலுைம் இப்போது கிடைக்கும் பாடல்களில் 11-ஆம் பாட்டே முதலில் இருக்கிறது. அதில் முதலில் முருகனைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கடவுளே கேர் முகமாக வாழ்த்தும் வாழ்த்துப் பாடல் கிடைக்காவிட்டாலும், நூலேப் படிக்க எடுத்தவுடன், சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேளின் செய்தி முதலில் இருப்பதைக் காணும்போது, கடவுள் வாழ்த்து இல்லாமையால் உண் டாகும் வருத்தம் ஒரளவு நீங்கி ஆறுதல் அடைய முடிகிறது. அந்தப் பகுதியில், முருகன் கடலிலே சூரணேச் சங்காரம் செய்த திருவிளேயாடல் வருகிறது. சூரனுக்கும் பிறருக்கும் காப்பாக ஒரு மாமரம் இருந்த தென்பது அக்காலத்தில் வழங்கிய வரலாறு. 'அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும், சூருடைய முழுமுதல் தடிந்த” தாகப் பாட்டுச் சொல்கிறது. முருகவேள் யானேயூர்க்து வருவதையும் அந்தப் பாடலில் புல்வர் கூறுகிரு.ர். -

இதில் உள்ள எட்டுப் பாடல்களில் வந்த துறைகள் வரு மாறு : இயன்மொழி வாழ்த்து, உழிஞை யரவம், காட்சி வாழ்த்து, செந்துறைப் பாடாண் பாட்டு, நாடு வாழ்த்து, விறலியாற்றுப் படை. இந்தப் பாடல்களுக்கு அமைந்த பழைய பெயர்கள்: புண் உமிழ் குருதி, உருத்துவரு மலிர் கிறை, வலம்படு வென்றி, பேரெழில் வாழ்க்கை, சில் வளே விறலி, புலாஅம் பாசறை, வென்ருடு துணங்கை, வெண் டக்லச் செம்புனல்.