பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைப் படை

பெருஞ்சேரல் இரும் பொறை என்னும் சேரன் செல்வக் கடுங்கோவாழியாதனுக்கு மகன். தகடுர் என்ற இடத்தில் அதிகமானுேடு பொருது வென்றவன். இவனை அரிசில் கிழார் பத்துப் பாடல்களால் புகழ்ந்திருக் கிருர். பதிற்றுப் பத்தின் எட்டாம் பத்தாக அவை அமைந்திருக்கின்றன.

புலவர், சேரமானுடைய படைகளைப் பார்த்து விட்டுச் செல்கிருர். போகும் வழியில் யாரோ புதிய மனிதர்கள் போய்க்கொண் டிருக்கிருர்கள். அவர்கள் புலவரைப் பார்த்து, ' இந்தச் சேரமன்னன் கணக் கிறந்த படைகளை உடையவனென்று சொல்லிக் கொள்கிருர்களே! எத்தனை படை இருக்கும் ?” என்று கேட்கிருர்கள். அவர்களுக்கு விடை கூறுவதுபோல ஒரு பாட்டு அமைந்திருக்கிறது.

"אל

சேரமான் தகடுரை வென்ற செய்தி எங்கும் பரவி யிருக்கிறது. அந்தப் போர் பல நாட்கள் நடந்ததென் பதைப் பிற நாட்டு மக்களும் தெரிந்து கொண்டிருந் தார்கள். அதற்கு ஏற்றபடி மிகுதியான படைப் பலம் சேரனுக்கு உண்டு என்று அவர்கள் எண்ணினர்கள். அரிசில் கிழாரைக் கேள்வி கேட்டவர்கள் சேர நாட் டுக்குப் புதியவர்கள் ; வழிப்போக்கர்கள். சினத் தோடு போர் செய்த பெருஞ்சேரல் இரும்பொறை