பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 புது வெள்ளம்

தள்ளும் கருப்பந்தெப்பத்தைக் காட்டிலும், அளித்தலில் வல்லவன். -

1. சென்மோ - போவாயாக, மோ : முன்னிலே அசை, பாடினி - விறலி. கலம் - ஆபரணம். 2. சந்தம் - சக்தனம், பூழில் - அகில், 3. தெண்கடல் தெளிவையுடைய கடல். முன்னிய-நோக்கிச் சென்ற துரை இருத்தலினுல் வெண்ட8ல என்ருர். 4. ஒய்யும் - செலுத்தும். நீர்வழி ஒய்யும் என்று சேர்க்க வேண்டும். கரும்பு - கருப்பக் தெப்பம்; ஆகுபெயர். கரும்பென்றது பேய்க் கரும்பை. 5. பல் வேல்-பல வேலேங் திய வீரரையுடைய படைகள். ஆல் : அசை அளி - பாது காக்கும் இயல்பு; உயிர் காக்கும் அருள். ே

துறை - விறலியாற்றுப்படை. வண்ணம் - ஒழுகு வண்ணம். துக்கு செந்துக்கு. பெயர் - வெண்டலச் செம்புனல்.

நுரையுடன் வந்த புது வெள்ளத்தை வெள்ளிய தலையையும் சிவந்த மேனியையும் உடையாரைப்போல, வெண்டலைச் செம்புனல்’ எனச் சிறப்பித்ததளுல் இதற்கு அப் பெயர் வந்தது. வெண்டலைச் செம்புன லென முரண்படக் கூறியவாற்றலும், முன் நின்ற அடைச் சிறப்பானும் இதற்கு வெண்டலைச் செம்புனல் என்று பெயராயிற்று' என்பர் பழைய உரைகாரர். நிறங்களில் ஒன்றினின்றும் ஒன்று மாறுபட்ட, வெண்மையையும் செம்மையையும் ஒரு சேர வைத்து வெண்டலைச் செம்புனலென்று சொன்னதையே, முரண் என்று அவர் சுட்டினர். முரண் என்பது செய்யுளில் அமையும் தொடைகளில் ஒன்று; விரோதம் என்னும் அணியாகவும் அதனைச் சொல்வார்கள்.