பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் காக்கும் கரும்பு 111

உணவூட்டிக் காப்பாற்றுகிறவன் என்று சொல்ல லாமா ? சந்தனத்தையும் அகிலேயும் சுமந்துகொண்டு, பொங்குகின்ற நுரையையும் தாங்கித் தெளிந்த கடலை நோக்கிச் செல்லும் ஆற்றின் வெண்டலச் செம்புன2லப் பார்த்திருக்கிருயா ? அந்தப் புனலின் வழியே செலுத்துகின்ற கரும்பைப் பார்த்திருப்பாயே! கருப்பந் தெப்பத்தைத்தான் சொல்கிறேன். அது சில சமயங் களில், நீரில் மூழ்கி உயிருக்கு மன்ருடும் மக்களைக் காப் பாற்றிய நிகழ்ச்சிகளை நீ பார்த்ததுண்டா ? கேட்ட தாவது உண்டா ? அந்தக் கருப்பந் தெப்பம் விளை யாடுவதற்கு உரிய கருவியாக இருப்பது மாத்திரமன்றி, உயிரைக் காக்கும் துணையாகவும் உதவுவது போல, பொறையன் கலைஞர்களின் கலைத் திறமையைக் கண்டு கொண்டாடிப் பாராட்டுவான்; அவர்களை வறுமையால் வாடாமற் காப்பாற்றுவான். ஆதலின் அவனிடம் செல்.

இவ்வாறு பெருங்குன்றுார் கிழார் பாடினர்.

சென்மோ பாடினி! நன்கலம் பெறுகுவை; சந்தம் பூழிலொடு பொங்குதுரை சுமந்து தெண்கடல் முன்னிய வெண்டலச் செம்புனல் ஒய்யும் நீர்வழிக் கரும்பினும் பல்வேற் பொறையன் வல்லளுல் அளியே. ைவிறலியே! நீ செல்வாயாக சென்ருல் நல்ல அணிகலத்தை நீ பெறுவாய்; பல வேற்படைகளேயுடைய இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன், சந்தனத்தையும் அகிலோடு பொங்கும் நுரையையும் சுமந்து கொண்டு தெளிவான கட&ல நோக்கிச் செல்லும் வெள்ளிய தலையை உடைய சிவந்த புது வெள்ளத்தில் நீர் வழியே