பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புது வெள்ளம்

ஒன்ருேடு ஒன்று கட்டிப் பெரிய தெப்பத்தைப் போல அமைக்கிருர்கள். அதை நீரில் விட்டால் நன்ருக மிதக்கிறது. நீர்த் தெய்வத்தை வணங்கி நாலைந்து பேராக அந்தக் கருப்பந் தெப்பத்தில் ஏறுகிருர்கள். கையிலே மூங்கிலை வைத்துக்கொண்டு தள்ளுகிருர்கள், ஆற்றின் நடுவிலே அந்தத் தெப்பம் போகிறது.

அதோ, அதோ! ஏதோ தலை தெரிகிறது. யாரோ நீரில் மூழ்கி மூழ்கி எழுகிருர் ஆழம் அறியாமல் காலைவிட்ட பேர்வழிபோலும் தெப்பத்தில் இருப்ப வர்கள், உயிர் ஊசலாடும் அந்த மனிதரைக் கண்டார் கள். இவர்கள் கோலை நீட்ட அவர் அதைப் பிடித்துத் தெப்பத்தில் ஏற, ஆற்றேடு போக இருந்த ஒருயிர் பிழைத்தது. அவர் உயிரைத் தெப்பம் காப்பாற்றியது; கரும்பு காப்பாற்றியது.

விறலியே வறுமையைப் போக்கிக் காப்பாற்று வார் இல்லாமல் நீ வாடுகிருயே. நான் சொல்லும் வள்ளலிடம் போ. நல்ல அணிகலத்தைப் பெறுவாய். அணிகலம் மாத்திரமா ? உன் ஆயுள் முழுவதும் உன்னைக் காப்பாற்றும் கடமையை அவன் மேற்கொள் வான். வேலை ஏந்தும் மறவர்கள் பலரையுடைய தன் படைச் செருக்கால் வெற்றி பெற்றவன் அவன் ; பகைவர் நாட்டுப் பொருள்களைக் கொணர்ந்து தன்னைச் சார்ந்தாருக்கு வாரி வாரி வீசுபவன் : பாது காப்பதில் வல்லவன் அளி மிக உடையவன்.

அவனுடைய அருளியல்பை எப்படி விளக்கு வேன் உயிர் போய்க் கொண்டிருக்கும் உடம்புக்கு