பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் காக்கும் கரும்பு

இளஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனது புகழைச் சொல்லும் பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தின் எட்டாம் பத்தாக உள்ளன. அவற்றைப் பாடினவர் பெருங்குன்றார் கிழார் என்பவர். அந்தப் பத்தில் ஏழாவது பாட்டு விறலியாற்றுப் படை ஒரு விறலி யைப் பார்த்துச் சொல்வதாக அமைந்தது.

אל

ஆற்றில் புது வெள்ளம் வருகிறது. வெகு வேக மாகக் கடலை நோக்கி ஓடுகிறது ஆறு. கடல் தெளிந் திருக்கிறது. கடலைக் கலக்குவார் யார்? ஆளுல் ஆற்றுப் புனலோ சிவப்பாக இருக்கிறது. நுங்கும் நுரையுமாகப் புது நீர் வருகிறது. செம்புனலி னிடையே வெளுப்பாக நுரை இருக்கிறது. தலையிலே கட்டும் முண்டாசைப்போல் அங்கங்கே நுரை தெரி கிறது. இந்தப் புனலுக்கு முண்டாசு கட்டின தலைகள் பல உண்டோ? சிவந்த மேனியும் வெண்டலையும் உடையதாக ஆறு விளங்குகிறது.

இந்த வெண்டலச் செம்புனலில் ஊரினர் விளையாடு கிருர்கள். தெப்பக் கட்டையைப் போட்டு அதைப் பற்றிக்கொண்டு ஆற்றுக்கு நடுவிலே நீந்திச் செல் கிருர்கள் ; ஆற்றின் வேகத்தோடு போகிருர்கள். சில இளைஞர்கள் ஆற்றிலே மிதக்கும்படி ஒரு புணையைக் கட்டுகிறர்கள். பேய்க் கரும்பை வெட்டி அவற்றை