பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 புது வெள்ளம்

முற்றுகையிடும் பொருட்டுப் புறப்பட்ட ஆரவாரத்தைச் சொல்வது. அப்போது யானைப்படைகள் முன்னே சென்று மதிற் கதவை முட்டித் திறக்கும். அதற்காகப் போகும் யானைகளைப் பார்த்ததை நினைத்துச் சொல் வதனால் இத்துறை யாயிற்று.

வென்ருடு துணங்கைப் பிணம் என்றது, ஊர் களிலே ஆடும் துணங்கையன்றி, களங்களிலே வென்ருடின துணங்கையையுடைய பிணம் என்ற வாறு. இச் சிறப்பானே இதற்கு வென்ருடு துணங்கை என்று பெயராயிற்று' என்று எழுதுவர் பழைய உரைகாரர்.

இது பதிற்றுப்பத்தில் 77-ஆவது பாட்டு.