பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைப் படை 107.

ஆழியின் உருளேகளேயுடைய. 6. பண் - பண்ணுதல்;. அலங்காரம் செய்தல்; ஆயத்தம் செய்தல். மாவும் குதிரை களும். மாக்களும்-காலாட்களும், 7. எண்ணின்று இலன் - எண்ணிற்று இலன் என்பது விகாரமாகி வந்தது: எண்ணியது இலன்; நான் எண்ணவில்லே யென்பது பொருள்.

8. கந்து - கட்டுத்தறி. கோள் ஈயாது -கொள்ளுவதற்கு உட்படாமல் கட்டுத்தறியால் கட்ட வசப்படுவதில்லை என்ற படி. காழ் - குத்துக்கோல்; அங்குசம் வேறு. யானையின் மேல் உள்ள பாகன் அங்குசத்தை வைத்திருப்பான். யானேக்கு அருகே செல்பவர்கள் குத்துக் கோலே வைத் திருப்பார்கள். குத்துக் கோலே முட்கோல் என்றும் சொல்வ துண்டு. முருக்கி - ஒடித்து. 9. உகக்கும்-உயர்ந்து பறக்கும். பருந்தினது கிழல், நிலத்தில் விழும் நிழல். சாடி - மோதி. 10. சேண் - உயரம். பரல்-பருக்கைக் கல்; சரளே. முரம்புமேட்டு நிலம். ஈர்ம்படை - ஈரத்தை உண்டாக்கும் கருவிகள்: கிணறு கிவட்டுவதற்குரிய கருவிகள். கொங்கர் - கொங்கு காட்டில் உள்ளோர். 'பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச், சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்" என்று இவர் அகழ்ந்த கிணறுகளைச் சொல்வர் (பதிற்றுப் பத்து, 22 : 12-3.) 11. பரந்தன்ன - பரந்தது போன்ற செலவின் செல்லுதலேயுடைய. முருக்கிச் சாடிச் செல்லுதலேயுடைய யானே என்று சேர்க்க வேண்டும். 12. காண்பல் - பார்ப் பேன். தாணேயான் . சேனையில், ஏ : அசை. ை

துறை - உழிஞை அரவம். வண்ணம் - ஒழுகு வண்ணம். துக்கு செந்தூக்கு. பெயர் - வென்ருடு துணங்கை. - உழிஞையரவம் என்றது. உழிஞைத்திணையைச் சார்ந்த துறை. ஓர் அரசன் பகையரசனது மதிலை.