பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் ! 8

ஒலிக்க, முரசு முழங்க, இந்தக் காட்சியைக் காணும் மக்கள் ஆரவாரம் செய்யச் சேரமான் திருவுலா வந்தான்.

அப்போது அவனுடைய தோற்றத்தைக் கண்டார் குமட்டுர்க் கண்ணனர். அவனுடைய வீரத்தையும், அவன் போர்களில் வெற்றி பெற்ற செய்தியையும் நன்கு அறிந்தவர் அவர். அவற்றை இப்போது சிறிதே நினைத்துப் பார்த்தார். அவனுடைய வீரச் செயலும் தோற்றமும் அவருக்கு முருகவேளினுடைய நினைவை உண்டாக்கின. முருகக் கடவுளின் வீரச் செயல்களைப் போலவே இந்த அரசனுடைய வீரச் செயல்கள் இருக்கின்றன. யானையின்மேல் இவன் வீற்றிருக்கும் அழகும் அப் பெருமான் யானையின்மேல் எழுந்தருள்வது போலக் கண் கொள்ளாக் காட்சி யாகவே இருக்கிறது என்று அவர் எண்ணம் படர்ந்தது. இந்த எண்ணம் பின்னும் வளர்ந்து வளர்ந்து புலவருடைய உள்ளத்திலே நிரம்பியது. அதன் பயணுக அவர் ஒரு பாடலைப் பாடினர்.

முருகன் விறல்

அலைகள் கொந்தளித்து மோதி எழும்பி அடிக் கின்றன. மலைபோல எழும்பிக் கரையிலே வந்து மோதுகையில் பிசிர் பிசிராக உடைந்து சிதறுகின்றன. அப்படி அலைகள் எழுந்து உடையும்படியாகக் கடுமை யான காற்று வீசுகிறது. அது பாய்ந்து வீசி அடித் தலில்ை சலனத்தையுடைய கரிய நீரில் அலைகள் எழுகின்றன. ஆழ் கடலாதலின் பெரிய பெரிய அலை