பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புது வெள்ளம்

புலவர் வஞ்சி மா நகருக்கு ஒரு நாள் வந்தார். அன்று மன்னன் தன் வெற்றியைக் கொண்டாடும் நாள்; அவன் தன் பட்டத்து யானையில் அமர்ந்து உலா வரும் நாள். அவனுடைய வெற்றித் திருவின் விளக்கம் அந்த உலாவில் நன்ருக வெளியாயிற்று. பல நாடுகளிலிருந்து சேரமானுக்குக் கப்பம் செலுத்தும் மன்னர்கள் வந்திருந்தார்கள். சில ஊர்களைத் தம்முடைய ஆட்சியிலே வைத்துக்கொண்டு வாழ்ந்த வேளிர் பலர் வந்திருந்தார்கள். இப்போது ஜமீன்தார் என்று சொல்லும் சிற்றரசர்களையே அக் காலத்தில் வேளிர் என்று சொன்னர்கள். அவ்வாறு வந்த மன்னர்களும் வேளிர்களும் தங்கள் தங்கள் ஊர்களி லிருந்து பல பண்டங்களைக் கையுறையாகக் கொண்டு வந்தார்கள். உலாவின் சிறப்புக்குரிய பல பொருள்களை அவர்கள் கொண்டு வந்து அளித்தார்கள். வஞ்சி பா நகர மக்கள் மாத்திரமன்றி மற்ற ஊர்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் இந்தத் திருவுலாவைப் பார்க்க மனிதர்கள் வந்திருந்தார்கள். அன்று வஞ்சி மா நகரம், அதுகாறும் கண்டிராத பெரிய திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. புலவரும் பாணரும் கூத்தரும் வந்து குழுமியிருந்தார்கள். வடமொழி வாணரும் வந்தார்கள்.

அரசனுடைய உலா மிகச் சிறப்பாக இருந்தது. பட்டத்து யானையின்மேல் அரசன் அமர்ந்திருந்தான். அவன் அருகில் ஒரு மன்னன் குடை நிழற்ற, இரண்டு சிற்றரசர்கள் கவரி வீச, வேறு மன்னர்கள் கைகட்டிய படியே தரையில் நடந்து வர, இன்னிசைக் கருவிகள்