பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம்!

வஞ்சி மா நகரம் சேரர்களுடைய தலைநகர். நெடுஞ்சேரலாதன் அந் நகரில் இருந்து அரசு செய்து வந்தான். அவனுடைய வெற்றிச் சிறப்புக்கு இமய மலேயே அடையாளமாக நின்றது. இமயத்தை நோக்கிப் படையுடன் புறப்பட்டபோது வட நாட்டில் உள்ள ஆரிய மன்னர் பலர் அவனை எதிர்த்தார்கள். அவர்களை யெல்லாம் வென்று இமயம் சென்று அம் மலையில் தன்னுடைய கொடியாகிய வில்லைப் பொறித்து விட்டு வந்தான். அவனுடைய வீரமும் புகழும் இமய மலையளவும் சென்றமையால் அவனை யாவரும் இமயவரம்பன் என்று சிறப்பித்துச் சொன்னர்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று அந்தச் சிறப்புப் பெயரோடு சேர்ந்து அவனுடைய இயற் பெயர் வழங்கலாயிற்று. -

அவனுடைய ஈகைச் சிறப்பையும், நாடு காவலின் உயர்வையும், வீரப் பெருமையையும் புலவர்கள் பாராட்டிப் பாடினர்கள். குமட்டுச் என்ற ஊரில் வாழ்ந்த அந்தணப் புலவராகிய கண்ணனுர் என்பவர் அந்த மன்னனைப் பத்துப் பாடல்களால் பாடினர். பதிற்றுப் பத்தில் இரண்டாவது பத்தாக அவை இருக்கின்றன. அந்தப் பத்தின் முதல் பாட்டில் அவனுடைய வெற்றி யைப் பாராட்டிப் பாடினர் புலவர். q

yk