பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம்! 5

சூரனை அழித்தான். அதனுல் தேவர்கள் விடுதலை பெற்றனர். பிறரால் செயற்கரும் செயலைச் செய்த மையால் முருகனுக்குப் பேரிசை உண்டாயிற்று. சூரனைக் கொல்ல வேண்டுமென்ற கடுஞ்சினத்தோடு சென்ருன் முருகன். அவன் வெற்றி பெற்ருன். அப்படி வெற்றி பெற்ற மிடுக்கோடு முருகவேள் தன் களிற்றின்மேல் ஊர்ந்து வந்தான். அமரர்கள் அப் பெருமானுடைய பவனியைக் கண்டு களித்தனர். கடுஞ்சின விறல்வேள் களிற்றின்மேல் ஊர்ந்தது போல இருந்தது, சேரலாதன் யானையின் மேல் உலாப் போந்த காட்சி.

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய வளிபாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் 5. சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு.

8 மலேயை ஒத்த அலேகள் தூய துளித்துளியாக உடையும்படி காற்ருனது விசிச் சிதைத்த, அசைகின்ற கரிய நிறைந்த கருப்பமாகிய நீரையுடைய செறிந்த கரிய பரப்பை உடைய பெரிய கடலே அணுகி, துன்பத்தைச் செய்தலே யுடைய அசுரர்கள் தமக்குப் பாதுகாப்பாகக் கூட்டி வைத்த சூரனுடைய (மாவின்) அடி மரத்தைப் பிளந்து பெரிய புகழையும் கடுமையான கோபத்தையும் வெற்றி மிடுக்கையு முடைய முருகன் யானையை ஊர்ந்து வந்தாற்போல.

மருள் உவம உருபு: வரையோ என்று மருள்வதற் குரிய என்றும் சொல்லலாம். புணரி அலே. வான்பிசிர் - தூயதுளி. பிசிர் உடைய - பிசிராக உடைய அட்ட - சிதறிய.