பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - புது வெள்ளம்

துளங்கு - அசையும். கமஞ்சூல் நிறைந்த கருப்பமாகிய நீர், கம - நிறைவு. 'நிறைந்த நீர், குல்போறலாற் சூலெனப் பட்டது' என்பது பழைய உரை. களி - செறிவு; தண்மை யுமாம். இரும்பரப்பு - கரிய பரப்பு. முன்னி - கினேந்து சென்று. அணங்கு - வருத்துதல். ஏமம் புணர்க்கும் - பாது காப்பாக அமைத்து வைத்த சூர் - சூரன். முழு முதல் - அடிமரம். தடிந்த - பிளந்த இசை - புகழ். விறல் - வெற்றி மிடுக்கு. வேள் - முருகன். ஊர்ந்தாங்கு - ஊர்ந்தது போல. ே முருகன் திருவிளையாடல்களைப் பற்றிய வரலாறு கள் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வழங்கும். கந்த புராணம் சூரபன்மனே மாமரமாகி நின்ருன் என்று சொல்கிறது. பழங்காலத்தில் இந்த மாமரம் சூரனுக்குப் பாதுகாப்பாக இருந்ததென்று ஒரு வரலாறு வழங்கி வந்தது. சூரவன்மாத் தனக்கு அரணுகவுடைய மாவின் முதல் என்றவாறு' என்று பழைய உரைகாரர் எழுதுவார். திருமுருகாற்றுப்படையின் உரையில் ஓரிடத் தில், அவுணரெல்லாம் தம்முடனே எதிர்ந்தார் வலி யிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங் கொண்டிருந்து சாதித்ததொரு மாவை வெட்டினன் என்றவாறு' என்று நச்சினுர்க்கினியர் எழுதுகிருர்,

கடம்பு தடிந்த வெற்றி முருகன் கடலிடையே மாமரத்தைத் தடிந்ததைப் போலச் சேரலாதனும் கடலிடையே ஒரு மரத்தை வெட்டினன். பழங் காலத்தில் அரசர்கள் தம்முடைய தலைநகரில் ஏதேனும் ஒரு மரத்தை வைத்துப் பாது காத்து வருவார்கள். அதற்குக் காவல் மரம் என்றும் கடிமரம் என்றும் பெயர் வழங்கும். அரசருக்குரிய