பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் ! 7.

சின்னங்களைக் காவல் புரிவதுபோல அந்த மரத்தையும் காவல் செய்வார்கள். பகைவரை வென்ற அரசன் அவர்களுடைய காவல் மரத்தை வெட்டி அதைக் கொண்டு முரசம் செய்வது வழக்கம்.

சேரநாட்டுக்கு மேற்கே கடலிடையே உள்ள சில தீவுகளைக் கடம்பர் என்ற மன்னர் ஆண்டு வந்தனர். அவர்களுடைய காவல் மரம் கடம்பு. அவர் களின்மேல் நெடுஞ்சேரலாதன் படையெடுத்துச் சென்று வென்ருன். குமட்டுர்க் கண்ணனர் அந்த வெற்றியைப் பாடுகிருர்.

பெரும்படையோடு சேரலாதன் கடம்பருடன் போர் செய்யச் சென்ருன். தீவாயினும் தலைநகரில் அரண்களை அமைத்திருந்தனர். அந்த அரண்களை அழித்தான். எளிதிலே அழிக்க முடியுமா? பகை மன்னருடைய படை வீரர்கள் எதிரிட்டுப் போர் செய் தார்கள். எதிர்த்துக் குறுக்கிட்டவரை வேலாலே குத்திப் போர் செய்தனர் சேரமான் படைவீரர். அப் படிக் குத்திக் குருதி தோய்ந்தமையால் வேலின் நுனி சிவந்திருந்தது; செவ்வாய் எஃகம் (வேல்), விலங்கு கிறவர்களை (தடுக்கிறவர்களை) யெல்லாம் குத்திக் கிழித்து அவர்களுடைய மார்பைத் திறந்தது. பகை வரால் ஊறுபடாத அரிய மார்பினை உடையவர்கள் அவர்கள். அந்த மார்பைத் திறந்தது வேல்; அங்கே புண் உண்டாகிவிட்டது. வலிமை பெற்ற உடம்பு ஆதலின் திறந்த புண்ணின் வழியே குருதி ஊற்றுப் போலப் பொங்கி வந்தது. பல வீரர்களுடைய மார்பு பிளந்து வரும் குருதி வெள்ளம் கீழே ஆறுபோலப்