பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புது வெள்ளம்

பாய்ந்தது. கடலிலிருந்து உட்புகுந்திருக்கும் உப்பங் கழிகளில் அந்த இரத்த ஆறு போய்க் கலந்தது. இயற் கையாக நீலமணியின் நிறத்தைப் போன்ற நீலநிற முடைய நீரைப் பெற்றவை கழிகள். அவற்றிலே செக்கச் சிவந்த குருதி வெள்ளம் பாயவே, அந்த நீர் நிறம் மாறிச் சிவந்த குங்குமக் குழம்புபோல ஆகி விட்டது. குங்குமக் குழம்பை மனுலக் கலவை என் பார்கள். செவ்வாய் எஃகம் மார்பைப் பிளந்த புண்கள் உமிழ்ந்த குருதி யினலே மணிநிற இருங்கழிநீர் நிறம் பெயர்ந்து மனுலக் கலவை போல ஆகும்படி கடம்ப மன்னருடைய மதில்களைச் சேர மன்னன் அழித்தான்.

ஒருவகையிலே வெற்றி கிடைத்து விட்டால் வீரர் களுக்குப் பின்னும் ஊக்கம் மிகுதியாகும். மதிலே அழித்த பின்பு சேரனுக்கு ஊக்கம் அதிகமாகிவிட்டது. வலிமை யிலே அவனுக்குக் குறைவு ஏது? முரண் (வலி) மிகு சிறப்பை உடையவன் அவன். அந்தச் சிறப்பிளுலே பின்னும் உயர்ந்த எழுச்சியை உடையவனுகிப் பகை மன்னருடைய காவல் மரத்தை அழிக்கப் புகுந்தான். அந்த மரத்தைப் பல வீரர்கள் சூழ்ந்து மொய்த்துக் காவல் புரிந்தனர். மதிலை வென்றதைவிட இது அரிய செயல் அன்று என்று முதலில் தோன்றியது. ஆல்ை இங்கே தம் உயிர் போனுலும் கடிமரத்துக்கு ஊறுபாடு நேரவிடாமல் மிக்க வலிமையுடைய வீரர்கள் படைகளுடன் காவல் புரிந்தனர். மரம் நன்ருகத் திரண்டு வளர்ந்திருந்தது. அதில் மலர்கள் நிறையப் பூத்திருந்தன. அந்தத் திரள் பூங் கட்ம்பு அதுகாறும் அதனையுடைய மன்னர் வாழ்வு மலர்ந்தது போல மலர்ந்திருந்தது. இப்போது அது குலையப் போகிறது.