பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் f இ

கடம்ப மரத்தை வெட்டும்படி வீரர்களை ஏவினன் சேரன். அவர்கள் காவலையுடைய அதன் அடிமரத்தை வெட்டினர்கள். வடிவேற் பெருமான் கடலிடையே மாமரம் தடிந்தான். சேரன் கடலிடையே இருந்த நகரில் கடம்பைத் தடிந்தான்.

கடம்பர்களின் காவல் மரத்தைத் தடிந்த வெற்றி எளியதன்று; மிகப் பெரிது. ஆதலின் அதற்கு அடை யாளம் வேண்டாமா? வெட்டின மரத்தைத் தன் நாட்டுக்கு எடுத்துச் சென்று அதைக் கடைந்து முரசின் குடமாக அமைத்து மேலே தோல் போர்த்து வைத்துக் கொண்டான். அந்த முரசு முழங்கி லுைம் வெற்றி முழக்கமே முழங்கும். முழங்காமல் இருந்தாலும் கடம்பு தடிந்த வெற்றிக்கு அடையாள மாக விளங்கும்.

இவ்வாறு போரிலே வெற்றி பெறுகின்றவன் சேரன்; வெல்போர்ச் சேரலாதன். அவனுடைய அரண் மனையில் நாள்தோறும் சிறு விருந்தும் பெரு விருந்தும் நடைபெறும். இனிய நறவை உண்பார்கள். பன்னுடையால் அரித்த கள்ளை உண்டு வெற்றியைக் கொண்டாடுவார்கள். அவன் மார்பில் சந்தனம் மணக்கும். மலை நாட்டையுட்ைய மன்னனுக்குச் சந்தனத்துக்குப் பஞ்சமா? அதை மார்பு நிறையப் பூசி யிருப்பான்.

அரசனுடைய வீரம் எவ்வளவு சிறப்பாக இருந் தாலும், ஊக்கம் உயர்ந்ததாக இருப்பினும் அவன் கருத்தை நிறைவேற்றும் படை வேண்டும். எந்தப் போரானலும் இளைக்காத படையாக இருக்கவேண்டும்.