பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 புது வெள்ளம்

சேரமானுக்கு அத்தகைய சிறந்த படை இருந்தது. எத்தகைய போரானலும் பகைவர்களை அட்டுத் தம் வீரத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் திரண்ட படை அது; போர் அடு தானே. இயற்கையான ஊக்கமும், கள்ளை நுகர்ந்ததனுல் உண்டாகும் செயற்கையான கிளர்ச்சியும், அகன்று மலர்ந்து சந்தனம் பூசி விளங்கும் மார்பும், போரை அடுகின்ற தானையும் உடைய சேரலாதனை நேரே விளித்துப் பாடுகிருர் புலவர்.

செவ்வாய் எ.கம் விலங்குநர் அறுப்ப அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின் மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து 10. மனுலக் கலவை போல, அரண்கொன்று, முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலே, பலர்மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய், வென்று எறி முழங்குபண செய்த, வெல்போர் 15. நார்அரி நறவின், ஆர மார்பிற்

போர்அடு தானேச் சேர லாத !

இ முன்பே பலரைக் குத்திச் சிவந்த நுனியையுடைய வேல் இடைப் புகுந்து தடுப்பவரைக் கிழிக்க, அரிய மார்பு பிளந்த புண்ணுல் வெளியிடப்பெறும் இரத்தத்தால் நீல மணியைப் போன்ற கரிய கழியின் நீரினது நிறம் மாறிக் குங்குமக் குழம்பைப் போலச் செந்நிறத்தைப் பெற, மதில் களே அழித்து, வலிமை மிக்க பெருமையோடு உயர்வான முயற்சியை உடையையாகி, பலர் சூழ்ந்து பாதுகாத்த பூக் களேயுடைய திரண்ட கடம்ப மரத்தின் காவலேயுடைய அடிப் பகுதியைத் துண்டாக்கும்படி ஏவி, அந்தத் துண்டு களால் வெற்றி கொண்டு முழங்கும் முரசத்தைச் செய்த,