பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம்! 11

வெல்லுகின்ற போரையும், பன்னடையால் வடிகட்டப் பெறும் கள்ளையும், சந்தனத்தை அணிந்த மார்பையும், போரில் பகைவரை அழிக்கின்ற படையையும் உடைய சேரலாதனே !

வாய் - முனே. எ.கம் - வேல். விலங்குநர் - தடுப்பவர். அறுப்ப - கிழிக்க. நிறம் - மார்பு. திறந்த - பிளந்த குருதி யின் - இரத்தத்தாலே. இருங்கழிநீர் - கரிய கழியில் உள்ள நீர். பெயர்ந்து - மாறி. மலைக்கலவை - குங்குமக்குழம்பு; சாதிலிங்கக் குழம்பு என்றும் சொல்லலாம். முரண் - வலிமை. ஊக்கலை-முயற்சியை உடையை ஆகி. மொசிந்து - மொய்த்து. ஓம்பிய - காப்பாற்றிய. திரள் - பருத்த. கடி - காவல். முழுமுதல் - அடிமரம். துமிய துண்டுபடும்படி யாக. ஏஎப் ஏவி. எறி - அடிக்கின்ற. பன - முரசு. நார் அரி - பன்னடையால் வடிகட்டுகின்ற, நறவு - கள். கள்ளில் பல வகை உண்டு. மனத்துக்கு உற்சாகத்தை ஊட் டும் பலவகைப் பானங்களையும் மதுவென்றும் கள் என்றும் வழங்குவது பழைய மரபு. வெறியூட்டும் கள்ளே மாத்திரம் இப்போது கள் என்று சொல்கிருேம். அரசர்களும் செல் வர்களும் மற்ற மக்களும் ஊக்கம் பெறும் பொருட்டுப் பரு. கும் பானம் என்றே இங்கே கொள்ளவேண்டும். வெறி யூட்டும் கள்ளாக இருந்தால் அதற்கு ஏற்றவகையில் புலவர் கள் அதைச் சொல்வார்கள். கறவின் -நறவினையுடைய. ஆரம் - சந்தனம்; முத்து என்றும் சொல்லலாம். போர் அடு - போரில் பகைவரை அடுகின்ற. தானே - சேனே. இ

கடம்ப மரத்தை வெட்டி முரசு செய்த இந்தச் செய்தியை இப் புலவர் வேறு ஒரு பாட்டிலும் சொல்லி யிருக்கிருர். “கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பணை' என்று பதிற்றுப்பத்தின் பதினேழாவது பாட்டில் வருகிறது.